எனது பணி சார்ந்த வாழ்வை மறுவரையறை செய்வதை பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன்… அதன் முதல் படி, இப்பொழுதிருக்கும் வாழ்விலிருந்து என்னை துண்டித்துக்கொள்வது. கிட்டதட்ட 6 மாதங்களாகவே பணியிடத்தில் இடர்கள்.. செயலுக்கம் முழுமையாகவே வற்றிவிட்ட நிலை. அனைத்தையும் அழித்துவிட்டு, முதலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என பல நாட்களாக முயன்று… ஜூன் 8 அன்று… அலுவலகத்தில் எனது பணி அனைத்தையும் முடித்து கொடுத்து, நீண்ட விடுப்பில் வெளிவந்தேன். அலுவலகம் என்ற ஒன்று நீக்கப்பட்டாலும், செய்யவேண்டியவை மலைப்போல் குவிந்திருக்கின்றன, தமிழ் விக்கி தொடங்கி… பொதுக்கொள்கைக்கான வகுப்புகள் வரை. அவை அனைத்தையும் சீர் செய்ய வேண்டும். நான் உருவகித்திருக்கும் ஆளுமையாக நான் உருமாற வேண்டும்… அந்த அகப்பயணம் ஒரு புற பயணத்துடன் இணைந்து நிகழ்வதே சரியாக இருக்கும் என தோண்றியது. நீண்ட பயணத்தில் சென்றும் இரண்டாண்டுகளுக்கு மேலாகிவிட்டிருந்தது. 

இந்தியாவிலிருக்கும் உலக பாரம்பரிய சின்னங்களை தேடிச்செல்லும் என பயணத்தின் அடுத்த நிறுத்தம் ஹம்பி மற்றும் அஜந்தா எல்லோர என முன்பே முடிவு செய்திருந்தேன். அதே சமயம், பைக்கில் நீண்ட பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையும் விடுவதாய் இல்லை…. முதல்முறை நீண்ட பயணம் எனும் பொழுது… வெளிமாநிலங்களுக்கோ, தனித்த பகுதிகளிலோ பயணம் செய்வதற்கு தயக்கமாக இருந்தது. முதலில், தமிழகத்திலிருக்கும் கலை பண்பாட்டு சின்னங்களை பைக்கில் சென்று பார்க்கலாம் என முடிவு செய்தேன். கடலூர் சீணு, இளம்பரிதி இருவரும் பார்க்கவேண்டிய இடங்களை சுட்டிக்காட்டினர். பிரஸ்தாரா ஜெயக்குமார் விரிவான பயணதிட்டத்தையே வகுத்தளித்தார். அதன்படி, ஜூன் 17 காலை சென்னையிலிருந்து புறப்பட்டேன்…

சென்ற இரண்டு பயணங்கள் குறித்தும் எதுவுமே எழுதவில்லை. இந்த பயணம் குறித்து கட்டாயம் விரிவாக, முடிந்தவரை தினமும் எழுத வேண்டும் என எனக்கே விதித்துக்கொண்டிருக்கிறேன். இது மட்டுமல்லாது, மேலும் சிலவற்றையும் தினமும் செய்ய வேண்டும் என வைத்திருக்கிறேன். செய்வேன். 


பொதுகொள்கை சார்ந்த எழுத்துக்கள்.. சமூக கட்டுரைகளை, தமிழ் விக்கி சார்ந்த செயல்பாடுகளை சந்தோஷ் சரவணன் என்ற பெயரிலும், பயணம், இலக்கியம் போன்றவற்றை லாஓசி என்ற பெயரிலும் எழுதலாம் என முடிவு செய்திருக்கிறேன். 

ஆனால் ஒரே இணையதளம் தான்… இருக்க நாலு பதிவ ரெண்டா பிரிச்சு போட்டா நாய் கூட சீண்டாது என்பதால் இப்பொழுதைக்கு இப்படியே இருக்கட்டும், தமிழில் பொதுக்கொள்கை பற்றி எழுத தொடங்கிய பின் பிரித்துக்கொள்ளலாம். முகநூலூம் அப்படி தான் இருக்கிறது. 
டிவிட்டரில் இரண்டு கணக்குகள்:

இண்ஸ்டாவில் சந்தோஷ் என்ற பெயரில் இல்லை. லாஓசி மட்டும் 

https://www.instagram.com/pizhaikal/


பைக்ல போறோம்ன்றப்ப நமக்கே ஒரு பயம் வரத்த தடுக்க முடியாதுல…  நல்லா safeஆ ஓட்டுவோம்னு தெரியும்… ஆனாலும் எப்பவேணா என்ன வேணா நடக்கலாம்ன்றப்ப பாதுகாப்பு ரொம்ப முக்கியம்… 

அதனால கவச உடைகள் வாங்கலாம்னு, என்னலாம் இருக்குனு நெட்ல தேடுனேன்…  உச்சந்தலைல இருந்து கால் வரைக்கும் எல்லாத்துக்கும் ஒரு protective gear ரெடியா இருக்கு… சரி அதெல்லாம் போட்டா ஒரு safety தானே, நாமும் வாங்குவோம்னு சென்னைல எங்க கிடைக்கும்னு தேடி பார்த்தேன். ஆழ்வார்திருநகர்ல ஒரு நல்ல கடைய கூகிள் காட்டுச்சு… கூகிள் இவளோ தீர்க்கமா சொல்றப்பவே நான் சுதாரிச்சிருக்கனும்…  என்ன பண்றது… வெவரம் தெரியாம பல்லாவாரத்துல இருந்து கிளம்பி அங்க போனா, கடைய முடி ஒரு வருஷம் ஆகுதேன்றாங்க… பொறவு… வண்டிய மவுண்ட் ரோடுக்கு விட்டு அங்க ஒரு கடைல சாமான் எல்லாம் வாங்கனேன்..

கைக்கு கிளவுஸ்… ஒரு riding jacket… முதுகு மார்பு, தோள் பட்டை முன்னங்கை கை முட்டினு எல்லா இடத்துலையும் கவசம் வைச்ச டிசைன். கூடவே ஒரு riding pant, அதுல இடுப்பு, முட்டி முழங்கால்னு கவசம். இரண்டு துணியுமே கீழ விழுந்தா கிழிஞ்சு சிராய்ப்பு ஏற்படாத வகையில தயாரிக்கப்பட்டது. கூடவே பாதம், கணுக்கால் இதெல்லாம் பாதுகாக்க boots. தூக்கிட்டு போற luggageய வண்டில பின்னாடி வைக்க ஒரு டெயில் பேக்… இதெல்லாம் சேர்த்து ₹20,000க்கு மேல ஆச்சு. டிரிப்புக்கு மொத்த பட்ஜெட்டே அவளோ தானே போட்டோம்னு யோசிச்சாலும்…. உயிர் முக்கியம்னு எல்லாத்தையும் வாங்கியாச்சு. அது மட்டுமே ஒரு 20 கிலோ இருக்கும்னு தோணுது…  அதெல்லாம் போட நான் படற பாட தனியா எழுதனும்…