விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா -2019ல் நிகழ்ந்த உரைகளின் தொகுப்பு.
மாலை விருது விழா, சுருதி டிவி நண்பர்கள் மூலம் காணொளியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுகதை அமர்வின் உரைகளையும் கட்டுரையாக பதிவேற்ற எழுத்தாளர்கள் சுனில் கிருஷணன், காளிப்பிரசாத் மற்றும் விஷால் ராஜாவிடம் கேட்டுள்ளேன். அவை கிடைத்தால், நிகழ்வு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு விடும்.
இப்பொழுதைக்கு, சிறுகதை அமர்வின் உரைகளை எனது நினைவில் இருந்து இங்கு பகிர்கிறேன்.

1. அனோஜன் பாலகிருஷ்ணன் – பச்சை நரம்பு சிறுகதைத் தொகுதி குறித்து சுனில் கிருஷ்ணன்.

  • பச்சை நரம்பு தொகுதி குறித்த எனது விமர்சன பார்வை, சில வருடங்கள் முன்பு வாசித்ததற்கும், இன்று மறுவாசிப்பு செய்வதற்கும் இடையே பெரிதும் மாறவில்லை.
  • காமம் குறித்து பேசும் கதைகள் மீது எனக்கு நல்ல அபிப்ராயம் இருந்ததில்லை. ஆனால், எழுத்தாளனின் நிஜமான அகத் தேடல் அதுவென்றால் வேறு வழி இல்லை என்பதை இப்பொழுது ஏற்கிறேன். ஆனால், அவை காமம் தாண்டி வாசகனுக்கு என்ன தருகிறது எனபது முக்கியம்.
  • அனோஜனின் முதல் தொகுப்பு, முதிரா எழுத்து முறை கொண்டது. இரண்டாவது தொகுதியில் வடிவ நேர்த்தியும், மொழி கூர்மையும் கைகூடியுள்ளது.

அனோஜனின் ஒட்டுமொத்த புனைவுலகம் குறித்து:

  • போர் என்ற backdropல் அனோஜனின் கதைகள் நிகழ்ந்தாலும், நேரடியாக போர் குறித்து பேசும் கதைகள் மிகக்குறைவு.
  • புலிகள் கட்டுப்பாட்டு பகுதில் வாழ்வதற்கும், இராணுவ கட்டுப்பாட்டு பகுதியில் வாழ்வதற்கும் வித்தியாசம் உள்ளது. இராணுவ பகுதியில் வாழ்ந்த அனோஜன் காட்டும் உலகு மற்ற ஈழ எழுத்தாளர்கள் காட்டும் உலகிலிருந்து வித்தியாசமாக உள்ளது.
  • தமிழர்கள் மற்றும் சிங்களர்கள் இடையேயான உறவு சிக்கல்கள் குறித்து அனோஜன் எழுதி உள்ளார். மற்றவர்களின் படைப்புகளில் இராணுவ வீரராகவும், புத்த பிக்ஷுகளாக மட்டுமே வரும், சிங்களவர்கள் இங்கு மனிதர்களாக வருகிறார்கள். சிங்களருக்கு தமிழருக்கிடையேயான நட்பு காதல் போன்றவற்றை அவரது கதைகள் அனுகுகின்றன.
  • பச்சை நரம்புக்கு பின் எழுதப்பட்ட கதைகளில், (மொழிக்கூர்மை கை வந்தப்பின், எதை வேண்டுமானாலும் கதையாக எழுதக்கூடிய திறன் வந்த பின்) அனோஜனின் செல் திசை சரியான வழியில் செல்வதாக எண்ணுகிறேன். மேலும் செறிவான கதைகளங்களையே அனோஜன் தேர்ந்தெடுத்துள்ளார்.

நேர்காணல் மூலம், அனோஜனை அணுகி அறிந்ததால் அவரது விமர்சன பார்வையில் மாற்றம் ஏதேனும் வந்ததா என்ற கேள்விக்கு, இல்லை என்றே சுனில் பதிலளித்தார். ஆனால், அனோஜனுடன் பழகியது அனோஜனின் படைப்புகளை அணுக, மேலதிக திறப்புகளை தந்ததாக கொள்ளலாம் என்றார்.

2. சிவா கிருஷ்ணமூர்த்தி – வெளிச்சமும் வெயிலும் சிறுகதைத் தொகுதி குறித்து காளிப்பிரசாத்

சிவாவின் கதைகளை சுஜாதா பாணி மற்றும் வண்ணதாசனின் பாணியின் கலவை என கூறலாம். சுஜாதா தனமான எழுத்துக்கள் என்றாலும், அவை உபயோகப்படுத்தப்பட்ட விதத்தில் சலிப்பூட்டாமல், கதைக்கு உதவவே செய்கின்றன.
வெகு சில கதைகளே, இந்த வடிவை தாண்டி மேலெழுகிறது.
அவரது படைப்புலகை சம்பத் என்ற கதாபாத்திரதத்தின் வழி அணுகலாம்.
காளி, சம்பத்தை. சிவாவின் படைப்புலகை அணுக ஒரு திறப்பாக கருதலாம் என கூறினார். எதிவினையாக பார்வையாளர் ஒருவர், “மாற்று கலாச்சார சூழலில் வாழும் சிவா, அதை எதிர்கொள்ள சம்பத் என்ற பகடியை சாதனமாக உபயோகித்து இருக்கலாமே. அவரது படைப்புலகில் ஒரு முக்கியமான அம்சமாக இருகக்கூடிய ஒன்றை, திறப்பாக மட்டுமே எண்ணி எளிதாக கடந்து செல்லுதல் சரியா?” என்ற கேள்வியை எழுப்பினார்.
காளி, சமபத் மூலம் அணுகுவது, வெறும் திறப்பாக மட்டும் அல்ல. சிவாவின் படைப்புகளை மேலும் ஆழ்ந்து அணுகவும், புரிந்துக்கொள்ளவும் அது உதவும். இந்த அணுகுமுறையை உபயோகிப்பதால், நாம் அதை எளிதில் கடந்து செல்கிறோம் என பொருள் ஆகாது என கூறினார்.

எஸ்.சுரேஷ் – பாகேஸ்ரீ சிறுகதை தொகுதி குறித்து விஷால் ராஜா

உரையின் கட்டுரை வடிவம்:
அச்செடுக்கமுடியாத இடைவெளிகள்- விஷால் ராஜா

  • நாவல் அனைத்தையும் கூறிச் செல்லும். ஒரு ஒட்டுமொத்த பார்வையை அளிகக்கூடியது. சிறுகதை ஒரு சிறு புள்ளி, ஒரு நிகழ்வை வெளிச்சமிட்டு காட்டுகிறது.
  • தமிழ் சிறுகதை உலகில், அசோகமித்திரனின் இடம் முக்கியமானது. இங்கு அசோகமித்திரனை பற்றி பேச காரணம், சுரேஷின் எழுதுக்கள், அசோகமித்திரனின் எழுத்துக்களுடன் அதிகம் ஒத்துப் போகிறது.
  • இருவரின் கதைகளும் செகந்திராபாத்யை அடிப்படையாக கொண்டிருப்பது ஒரு ஒருமை என்றாலும், நான் குறிப்பிட விரும்புவது வடிவங்களில் உள்ள ஒருமை குறித்து.
  • அசோகமித்திரனின் கதை வடிவம்: சம்பவங்களைக் கூறிச் செல்வது. உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படுத்தாதது. ஆனாலும் படைப்பூக்கம் கொண்டது.
  • அவரது அவதானிப்பு திறன், புறவுலக, அகவுலக சித்தரிப்புகள் செறிவானவை. அவரது படைப்புகளுக்கு இலக்கியத்தன்மை அளிப்பது இவை தான்.
  • சுரேஷின் எழுத்துக்கள் சம்பவ சித்தரிபில் அசோகமித்திரனின் வடிவை பின்பற்றுவதாக தோன்றினாலும், படைப்பூக்கம் அற்றதாக உள்ளது.
  • சித்தரிப்புகளில் ஆழம் இல்லை. அவரது அடிப்படை தேடல் எதைக் குறித்து என அறிய முடியவில்லை. கதையுடன் ஒன்றவும் இயலவில்லை.
  • சில கதைகள் இறுதி திருப்பத்தை நம்பி உள்ளன. பல கதைகள் அதீத உணர்ச்சி வெளிப்பாடுகளை நம்பி அல்லது கட்டமைக்கப்பட்ட கதாபாத்திரங்களை நம்பி உள்ளன.
  • இலக்கிய தன்மை இல்லாமல், அசோகமித்திரனின் வடிவம் மற்றும் வெகுஜன பத்திரிக்கையின் நுட்பங்களை உபயோகித்து உருவாக்கப்பட்டதாக தோன்றுகிறது.

விஷால் முன்வைத்த கேள்விகள்
1. இந்த விமர்சனத்தில் சுரேஷின் புனைவுலகிற்குள் செல்லவில்லை. செல்லாமல், இப்படி ஒரு விமர்சன பர்வை வைப்பது சரியா?
2. சிறுகதை வடிவத்தின் அடுத்த கட்டம் என்ன? அழகியல் கூடிய படைப்பு என்றாலும், இன்று அசோகமித்திரனின் வடிவில் எழுதினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? இன்றைய சிறுகதைக்கான வடிவம் என்ன?

தேநீர் இடைவெளியில் நிகழ்ந்த ஒரு உரையாடல் குறித்து பிச்சைக்காரன்.
http://www.pichaikaaran.com/2019/06/blog-post_9.html

மாலை விருது விழா

வரவேற்புரை மற்றும் விருது வழங்களைத் தொடர்ந்து

மலையாள கவிஞர் பி. ராமன் அவர்களின் உரை:

தேவதேவன் அவர்களின் உரை

அருணாச்சலம் மகாராஜன் அவர்களின் உரை

ஜெயமோகன் அவர்களின் உரை


ச துரை அவர்களின் ஏற்புரை