day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன….
கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில், என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்??
B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து திருச்சி பாரதிதாசன் மேலாண்மை நிறுவனத்தில், அட Bharathidasan Institute of Managementல் MBA படிக்க போகிறேன்…
மற்றொரு தளத்தில், இலக்கிய வாசிப்பை விரிவு படுத்த சில முயற்சிகள். ஜேஜே சில குறிப்புகள், ஒரு புளிய மரத்தின் கதை, விஷ்ணுபுரம், குழந்தைகள் பெண்கள் ஆண்கள், யாமம், பாரதியின் கவிதைகள் என தொடர் வாசிப்புகள்…
நீண்ட நாள் கணவாய் இந்த வலைத்தளம். www.blog.pizhaikal.in என்ற domain வாங்குவது எளிய செயல்தான்… ஆனால் ஏனோ மற்றவர் உருவாக்கிய வடிவமைப்பை பின் தொடர மனம் இசையவில்லை. அடிப்படை வார்ப்புரு கொண்டு முழு தளத்தையும் அதன் ஒவ்வொரு பாகத்தையிம் மாற்றி வடிவமைத்தேன். இங்கு காட்சி பொருள் என் எழுத்து மட்டுமே எனினும் ஒரு ஆசை… web designing, hosting, cms என அனைத்தையும் கற்று தேர்ந்து…. பல தவறுகளை கடந்து இதோ பிழைகள்.காம் உங்கள் முன்!
ஆனால் இதெல்லாம் எதற்கு??
பயணம் என்பது இலக்கு சார்ந்தது அல்ல பயணித்தல் சார்ந்தது என்றாலும் வாழ்க்கை பயணம் எதன் பொருட்டு என்ற கேள்விக்கு பதில் வேண்டுமே!
பதின்ம வயதில் அன்பை தேட தொடங்கி மரணத்தை அடைந்த பொழுது… இன்னும் சில நாள் வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற நட்பாசையும்.. நாளை மீதான நம்பிக்கையும் பயணத்தை தொடர செய்தன…
பலகீனமான இதயம் என்பதால் தான் கொஞ்சம் பலமான தடுப்பு சுவர் எழுப்பி பாதுகாத்து வந்தேன்… அப்படியும் தடையுடைத்து உள்நுழைந்து இதயத்தின் ஒரு பகுதியை தனதாக்கிக் கொண்டு பிரிந்து தன் வழிசெல்ல தொடங்கினார்… உணர்வுகளை மட்டுபடுத்த முயன்று மரத்து போனதுதான் மிச்சம்!
உறவுகளின் செயல்கள்.. அந்த உறவுமுறை மீதான நம்பிக்கையையே ஆற்று போகச் செய்யும் என எண்ணவில்லை நான் அன்று!
விட்டுச் செல்பவர்களுக்கு என் அருமை புரியவில்லை என தேற்றி கொள்ளலாம்… ஆனால் என் இன்மை எந்த மாற்றமும் கொண்டு வராத பொழுது என் இருப்புக்கு என்ன அர்த்தம்??!!
நிராகரிப்பின் உச்சியில் தில்லி சென்னை தமிழ்நாடு விரைவில் கதவோரம் நின்று கடக்கும் ஒவ்வொரு நதியிலும் குதிக்க எத்தனித்த என்னை தடுத்த அந்த ஒன்று என்னவென்று இன்றும் தேடிக்கொண்டு இருக்கிறேன்… இல்லை ஒருவேளை வாழ்வதற்கு அந்த தேடலை காரணமா கொள்கிறேனோ??
சொல்ல வருவதெலாம்,
வலி பழகி மரத்து போன பின் எதையும் உணராமல்… உறவுகள் உண்மையென அறிந்தாலும் இரண்டடி தள்ளி நிற்க வேண்டிய கட்டாயத்தில்… சிரிப்போ அழுகையோ கண்ணீரை வர வைக்குமே என உணர்ச்சிகளை புதைத்து விட்டு வாழும் நிலையில்… எழுதுவது எழுத்துக்கு செய்யும் துரோகம் என எண்ணுகிறேன்…
கவிதையோ…. கட்டுரையோ… கீச்சோ… அன்னியபட்டு நிற்கும் உணர்வுகளை எழுத்தாக்க முற்படுவது சரியென ஏற்க மறுக்கிறது மனம்…
ஆயினும் எங்கோ ஒரு ஓரம் ஆகச்சிறந்த படைப்புகள் புனைய இந்த மனநிலையே சிறந்தது என்ற ஒரு என்ன ஓட்டம் எழுவதை தடுக்க இயலவில்லை…
பொறுத்திருந்து பார்ப்போம்… காலம் செய்யும் முடிவை…
சிறிது காலத்திற்கு அனைத்திலிருந்தும் விடைப்பெறுகிறேன்,
லாஓசி!
May 31, 2013 at 3:43 pm
பாஸ் ஒரே குழப்பமா கீது. ஏதோ கமலகாசன் இண்டர்வூல பேசுர மாதிரி இருக்கு உங்க எழுத்து. ஏதோ ஒரு பொண்ணு மனச குழப்பிடுச்சுன்னு நெனுக்கிறேன். அத்ததான் இலக்கி நெய்யமா சொல்ல டை பண்ணுரீங்க. போவட்டும் உடுங்க. நாங்கெல்லாம் பாக்காத வலியா. வலியே நம்மப்பாத்தா கிலி பிடிச்ச ஓடுற மாதிரி வலிப் பாத்தாச்சு.
May 31, 2013 at 7:28 pm
அது வந்து… என்ன சொல்ல வறேன்னு புரிய கூடாது ஆனாலும் சொல்லனும்.. குழப்புதுல??!! அதே குழப்பத்துல தான் எழுதுனேன்.
பொண்ணு வந்து இருந்தா பிரச்சன இல்ல பாஸ்.. போனதால தான் பிரச்சனையே…!!
வுடுங்க எல்லாம் சரியாப் போகும்.. இல்லன்னா உங்க கிட்ட டிரைனிங் எடுத்துக்றேன்!