அனர்த்தங்கள் எழுதி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வாழ்க்கையில் பல மாற்றங்கள். MBA முடித்து, ஒரு நிறுவனத்தில் கொத்தடிமையாக 3 ஆண்டுகள் வேலை செய்து, இன்று அலுவலக நேரத்தில், இந்தப் பதிவை தட்டச்சும் அளவிற்கு ஒரு நல்ல நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன்.
என்னைக் குறித்து, வாழ்க்கைக் குறித்து, உலகை குறித்தெனப் பற்பல கேள்விகளுடன் இளங்கலை பொறியியல் பட்டயம் முடித்தவாக்கில் வாசிப்பதையும் எழுதுவதையும் நிறுத்திவிட்டேன். எழுத்துச்சோர்வு! அனைவரும் கூறுவது தான் என்றாலும், உள்ளிருந்து எழும் ஊந்துதலின் பொருட்டே எழுதினேன், எழுதுகிறேன். இடையில் அதை ஏன் இழந்தேன், இன்று எதனால் எழுதுகிறேன்? எதற்கும் பதில் தெரியவில்லை. தேடுவோம்.
கேள்விகள் என்பதை விட, கேள்விகளுக்குப் பின்னுள்ள பொருளின்மை. எங்கும் எதிலும் ஒன்ற இயலாமை. இந்தத் தனிமை எந்தன் குறையோ என்ற கேள்வி. ஒருவகையில் தாழ்வுணர்ச்சி.
தமிழகத்தின், ஏன், இந்தியாவின் குறிப்பிடத்தகுந்த கல்லூரிகளில் ஒன்றில் இளங்கலை பொறியியல் பயின்றாலும், அங்கிருக்கும் மேட்டுக்குடி கலாச்சாரத்தில் என்னால் ஒன்றமுடியவில்லை. CAT தேர்வில், எந்தத் தயாரிப்பும் இல்லாமல் தேர்வெழுதியவர்களில் முதல் 7 சதவிகத்துக்குள் வந்தையும் ஏதோ அதிர்ஷ்டமாகத் தான் எண்ணினேன். MBA, திருச்சியில். Again, தேசத்தின் முதல் 20 கல்லூரிகளில் ஒன்றில். பள்ளி, கல்லூரி போல், அங்குத் தனிமை படுத்தப்படவில்லை என்றாலும், என்னால் அவர்களுடனும் ஒன்ற இயலவில்லை. அவர்கள் பார்க்கும் சினிமா எனக்கு உவக்கவில்லை. BBC Sherlock Holmes, பார்க்க முடிந்த என்னால், How I met your mother அல்லது Friends பார்க்க இயலவில்லை. அவர்களது வாழ்க்கை, அவர்களது ரசனை, அவர்களது பொழுதுபோக்கு எதிலும் ஒன்ற இயலாமல் ஒரு தத்தளிப்புடனே இருந்தேன். Again, doubts on myself. நான் இங்கு இருக்க வேண்டியவனா? இது என் இடமா?
இவற்றிடையே, முதன்முதலில் என்னை நான் நானாக உணர்ந்தது சந்தில் (தமிழ் கீச்சுலகம்). யாரோவாக இருந்தவரை அங்கும் பிரச்சனை இருக்கவில்லை. கொஞ்சம் கவனம் கிடைக்க ஆரமித்த பின்பு, பல சர்ச்சைகளில் ஊருடன் ஒத்துப்போகாததால் தனிமை படுத்தப்பட்டேன் பெரும்பான்மையைத் திருப்தி செய்ய, gangல் ஒருவனாகக் காட்டிக்கொள்ளப் பலர் செய்யும் விஷயங்களைச் செய்ய மனம் ஒப்பவில்லை. ஆனால், அதன் பொருட்டே நான் தனிமை படுத்தப்படும் பொழுது, it further fuelled my inferiority complex. எங்கோ என்னிடம் தவறுள்ளது என்ற எண்ணம் மட்டும் மாறவே இல்லை.
இந்தக்காலகட்டத்தில், ஜூன் 2014ல், ஜெமோ.உள்ளேவில் ‘விதிசமைப்பவர்கள்’ (மறுபிரசுரம்) வாசித்தேன். தொடர்ந்து அதைச் சார்ந்த விவாதங்களும் மறுபிரசுரம் ஆகின. அது தந்த திறப்பு வார்த்தையில் அடங்காது. அவர் அதில் குறிப்பிட்டது நுண்ணுணர்வு கொண்டவர்கள், படைப்பாளிகளை என்றாலும், நான் எனக்கு ஏற்ற வகையில் அதை அர்த்தம் செய்துகொண்டேன். Am different from others, I am better than others! நான் என் வாழ்க்கையை அன்று வரை அணுகியதற்கும், அதன் பின்பு அணுகுவதற்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. அதன் பிறகு என்றுமே தாழ்வுணர்ச்சி எழுந்ததில்லை. வாழ்க்கையில் நான் அடைந்த பலவற்றை நல்லூழ் என்றோ, விதி என்றோ கடந்து செல்லாமல், அது எனது அறிவாற்றலுக்குக் கிடைத்த வெகுமதியாகப் பார்க்கத் தொடங்கினேன். I belong there and I am better than all others there!
நான் மற்றவர்களை விட மேலானவன், அனைவரையும் போல் இல்லை என்ற எண்ணம் தந்த நம்பிக்கை அபாரமானது. எவரும் செய்யக்கூடிய விஷயத்தைச் செய்ய நான் பிறக்கவில்லை என்ற எண்ணம். இளங்கலை முடித்து விப்ரோவில் கிடைத்த வேலையில் சேராமல் MBA செய்ய முற்பட்டதே coding, நிரல் யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்ற எண்ணமும், I can do better than this என்ற முனைப்பும் தான். ஆனால், அப்பொழுது அது எனக்குத் தராத தன்நம்பிக்கை, விதிசமைத்தவர்கள் வாசித்தபின் கிடைத்தது. நிதியியல் (Finance?) சார்ந்த வேலையில் தான் சேர வேண்டும் என்று பிடிவாதமாய் campus placementல் வேறு துறை சார்ந்த எந்த நிறுவனத்திலும் விண்ணப்பிக்கவில்லை, placement season தொடங்கி ஒரு வருடம் கழித்து, படிப்பு முடித்து 6 மாதம் கழித்தே வேலைக் கிடைத்தது. தொடக்கச் சம்பளம், எனது வகுப்பு சராசரியையும் விட வெகு குறைவு! ஆனாலும், நாம் நினைத்ததை செய்கிறோம். நாம் தேந்தெடுத்த பாதையில் பயணிக்கிறோம் என்ற நம்பிக்கை, என் ஊக்கத்தைத் தக்கவைக்க உதவியது!
இன்று, மீண்டும், அது போன்ற ஊக்கம், அதிஊக்கம், தேவைப்படும் நிலையில் நிற்கிறேன்.
(மேலும்…)
February 5, 2019 at 10:37 pm
I hope you soon find that inspiration 🙂