ஜூன் 17 காலைல வீட்லருந்து கிளம்பனேன்… இரவு பாண்டியில் தங்குவதாக திட்டம்… வழில கொஞ்சம் கோவில்களை பார்ககனும்… காலை 6 மணிக்கு கிளம்பி… 11 மணிக்கா பண்டி போய் சேர்ந்து… அன்னிக்கே உள்ளூர்லையும் சுத்தி பார்த்துக்கலாம்ன்றது பிளான்… ஆனா முன்னாள் நைட் தூக்கமே வரல. விடிய விடிய முழிச்சிக்கிட்டிருந்து… விடியற்காலை தூங்க போறதுனு பழகிபோச்சு. இதோ இந்த பதிவையே நைட் 3 மணி தான் உட்காந்து எழுதிக்கிட்டு இருக்கேன்… அன்னிக்கும் 3 மணிக்கா தூங்கி 7 மணிக்கு தான் எழுந்தேன்.

ரெடியாகி, பிறகு இந்த armoured dress போட மட்டுமே அரை மணி நேரம் ஆச்சு… வண்டில பின்னாடி பைய வைச்சு கட்டி, இதெல்லாம் போட்டுக்கிட்டு வண்டில எப்படி ஏறி உட்காறதுனு வேற தெரியல. ரொம்ப யோசிச்சு ஒரு வழி கண்டு பிடிச்சு.. அத practice பண்ணி கிளம்ப 9 மணிக்கு மேல ஆச்சு.

பொதுவா வண்டில ₹200க்கு அதிகமா பெட்ரோல் போடுறதில்ல.. கூடவே பைக் ரைட் போறப்பல்லாம் கிளம்புனதும் full tank petrol போட்டு பாக்ற பழக்கமும் இருக்கவே, முதல் நிறுத்தம்.. பெட்ரோல் போட.

இந்த armoured pantக்கு உள்ள இருக்க பேண்ட்ல wallet வைச்சிருந்தேன். அங்க அத எடுக்க வேண்டிய சூழ்நிலை. இந்த டைட்டான pant உள்ள இருக்க பாக்கேட்ல இருந்து எடுக்க இந்த டிரஸ்ஸோட என்னோட முதல் சண்டை. ஒருவழியா முடிச்சு கிளம்பி, பார்க்க வேண்டிய முதல் இடத்திற்கு வந்தேன்..

சாளுவன்குப்பம் முருகன் கோவில். அங்க அகழாய்வு நடந்த இடம், மையசாலைல இருந்து கொஞ்சம் உள்ள தள்ளி இருந்துச்சு.

வண்டி செல்லக்கூடிய பாதையாக தெரியவே, வண்டியிலையே போயிடலாம்னு 10 மீட்டர் தான் போயிருப்பேன், மணல்ல சிக்கி வண்டி நின்னு, எடை தாளாமல் விழுந்தும்விட்டது.

நல்லதோர் ஆரம்பம் என நினைத்துக்கொண்டே.. வணடியை நிறுத்திட்டு கோயில் கிட்ட போய் பார்த்தேன்… வண்டில பையெல்லாம் இருக்கவே ரொம்ப தூரம் போக முடியல. கொஞ்சம் பார்த்துட்டு திரும்ப வந்துட்டேன்.

இங்க வந்து வந்து வண்டிய திருப்பலாம்னு பார்த்தா வண்டி ஒரு இஞ்ச் கூட நகரமாட்டேன்து. ரொம்ப போராடி. பிறகு பைய அவிழ்த்து ரோட் வரை கொண்டு போய் வைச்சிட்டு, திரும்ப வந்து.. கஷ்டபட்டு தள்ளிட்டு வரதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு.

அடுத்து புலிக்குகைக்கு போனும்… அங்க பார்க்கிங்ல இருக்றவர் கிட்ட சொல்லி பையோட வண்டிய விட்டுட்டு… நடந்து உள்ள போனேன். பை இல்லனாலும் இதையெல்லாம் போட்டுக்கிட்டு நடக்க கூட முடியல. சும்மா புலிக்குகைய தூரமா நின்னு பார்த்துட்டு, அங்கையே ஒரு மரத்துக்கீழ கொஞ்ச நேரம் படுத்துட்டு கிளம்பனேன்.

மொத நாளே.. இவளோ tiredஆ இருக்கே, கஷ்டமா இருக்கேனு கவலையா இருந்துச்சு… சரி.. பார்த்துக்கலாம், இல்லனா பாண்டிலருந்து திரும்ப வந்துடலாம்னு நினைச்சிக்கிட்டேன்.

அடுத்து வள்ளியூர் திருபுளிஸ்வரர் மற்றும் வைகுண்டநாத சுவாமி கோவில். ஊருக்குள்ள தனியா இருந்த கோவில். வாசலில் இருப்பவர், எந்த ஊர்லருந்து வரீங்கனு கேட்டார்… சென்னைனு சொன்னதும் சரினு கேட்டுக்கிட்டார்… கல்பாக்கம்லாம் சென்னைனு நினைச்சிருந்தா.. இவங்க வேற மாதிரி பாக்கறாங்களேனு நினைச்சிக்கிட்டேன்…

அங்கருந்து கிளம்பி.. பாண்டி. சிலமுறை பயணித்த பாதை.. காதில் seen and the unseen podcast ஒலித்துக்கொண்டிருந்தது. வணிகம் தொடர்பான உரையாடல்கள்.

ஊர் பெயர்களை கவனித்துக்கொண்டு வந்தேன், அடையாளஞ்சேரி, தென் பட்டிணம், இடைகழிநாடு போன்ற பெயர்கள்..

ஒரு வழியா பாண்டியை நெருங்கும் பொழுது நேரம் இரண்டை நெருங்கிவிட்டிருந்தது. Covid அது இதுனு புல்லாம் பண்ண சொன்னாங்களே, லேட்டா போனா ஆரோவில்ல உள்ள விடமாட்டாங்களோனு.. பயந்து.. ரூம்க்கு போகாம நேரா ஆரோவில்லுக்கு போயிட்டேன். அங்க பார்க்கிங்ல பைய பார்த்துக்க முடியாது, மூனு நிமிஷம் நடந்து போனிங்கனா information Center வரும் அங்க வைச்சிடலாம்னு சொன்னாங்க. மறுபடியும் பைய கழட்டி துக்கி நடந்தா… சுத்தமா முடியல… ரொம்ப கொஞ்சம் கொஞ்சமா தூக்கிட்டு போய்.. அவங்க சொன்ன இடத்துல வைக்கவே அரை மணிநேரம் ஆச்சு.

அங்க உள்ள போனா, appointmentலாம் விசாரிக்கவே இல்லை. ரூம் எடுத்து இதெல்லாம் வைச்சிட்டு வந்திருக்கலாம் போல.. 😥.

அங்க அறிமுகங்களுக்கு பிறகு.. நடந்து மைத்ரி மந்திர்க்கு போகனும்னு சொன்னாங்க. சரி மூச்ச பிடிச்சு போயிடலாம்னு பார்த்தேன்… பாதி வழில 5 நிமிஷத்துக்கு மேல, நிக்க கூட முடியல. அங்கையே உட்காந்து ரெஸ்ட் எடுத்து திரும்ப வந்துட்டேன்.. சரி, மைத்ரி மந்திர் பார்க்க கொடுத்துவைக்கலானு நினைச்சிக்கிட்டேன்.

அங்க வயசானவங்க, கைகுழந்த வைச்சிருக்கவங்க போக ஒரு வண்டி இருக்கு. நான் திரும்பி வரவும் அந்த வண்டி கிளமவும் சரியா இருந்துச்சு. போயிட்டு பாதில வந்துட்டேன் முடியலனுலாம் சொல்லி… அதுல ஏத்திக்க வைச்சு.. வண்டில போய் இறங்கனா… அங்க இன்னும் 5 நிமிஷமாவது நடக்க வேண்டி இருந்துச்சு, நடந்து போய் மந்திர பார்த்துட்டு, திரும்ப வந்து ஒரு மரத்துக்கீழ படுத்துட்டேன் (பெஞ்ச், படுக்கக்கூடாது என அறிவிப்பு இருந்தது).

பாண்டியில் மையத்தில் ஓயோவில் அறை பதிவு செய்திருந்தேன். அவளோலாம் பயணம் முடியாதுனு நல்லா தெரிஞ்சு போச்சு. பக்கத்துல கிட்ட ஒரு ரூம் புக் பண்ணி.. மறுபடியும் information Center வந்து பைய எடுத்துக்கிடேன். அங்கருந்து திரும்ப வர எல்லாருக்கும் பஸ் வசதி இருக்கு. போகும்போது மட்டும் நடந்து தான் போனும்.

Information Center ஒரு சின்ன ரோடுக்கு அந்த பக்கம். இந்த பக்கம் பாதைல 3 நிமிஷம் நடந்தா பார்க்கிங். பைய எடுத்து சாலைய கடக்க மட்டும் தான் முடிஞ்சிது… அதுக்கு மேல எதுவுமே முடியலல்ல.. அப்படி உட்காந்துட்டேன்… மறுபடியும் ரொம்ப நேரம் கழிச்சு… கொஞ்ச தூரம் (3/4 அடி) தூக்கிட்டு போய் மறுபடியும் உட்காந்து… என்ன பண்ண போறோம்னு சுத்தமா புரியல. அப்ப, நல்லவேலையா யாரோ ஒருத்தர்.. சைக்கிள்ல வந்தார்.. அவர் கிட்ட உதவி கேட்டு அவர் சைக்கிள்ல வைச்சு… பைய கொண்டு வந்து.. பார்கிங்ல வண்டில கட்டி… புக் பண்ண ஹோட்டலுக்கு போனேன்.. வழக்கமா பண்ற மாதிரி ஓயோல காச கட்டினா.. அவங்க ஒத்துக்கல. நீங்க நேரா எங்களுக்கு pay பண்ண வேண்டியதானே, ஏன் ஓயோக்கு பே பண்ணிங்கனு… தகராறு. அத பேசி முடிக்க அரை மணிநேரமாவது ஆகிருக்கும்…

அத பேசி முடிச்சு… ஒருவழியா ரூம் வாங்கி… முதல்நாள் முடிவடைந்தது.