மீண்டும் மீண்டு பதிவை சொல்புதிது குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு சில விவாதங்கள். ஜெமோவுடனான மானசிகமான உரையாடல்கள் தன்மீட்சி கட்டுரை வாசிப்புகள்.
தெளிவடைந்துவிட்டேனா என தெரியவில்லை. ஆனால், முன்னோக்கி செல்ல பிடிப்புகளை உருவகித்துள்ளேன்.
1. அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். இது எனக்கான வேலை இல்லை. நான் இருக்க வேண்டிய இடமும் இல்லை. ஆனால், என் இடத்தை கண்டடையும் வரை இந்த வேலை அவசியம் ஆகிறது. மீள்தலில் கூறியது போல், ஒரு துறவு நிலை எனக்கும் சாத்தியம் இல்லை‌. பணம் வேண்டும்.
2. எனது இடத்தை கண்டடையும் பயணமாக சில செயல்கள். பட்டய படிப்புகள் போன்றவை‌. அவை அலங்கார செயல்பாடுகளாகவே இருக்கட்டும். எனது நாளில் மூன்றில் ஒரு பகுதியை அலுவலகம் எடுத்துக்கொள்ளும் பொழுது அதிலிருந்து அதிகபட்ச சம்பளம் / நிறைவை அடைய முயல்வது
3. இலக்கியம். வாசிப்பு, பயணம். நான்.
இதை நடைமுறைப் படுத்துவதில் பல உள்ளச்சிக்கல்கள்‌. அதையெல்லாம் இந்த தளத்தில் வெளியிடலாகாது என்பதால் diary.pizhaikal.in என்ற தளத்தில்‌ புலம்பல்களை தனியாக வெளியிடலாம் என்றிருக்கிறேன்‌.
எனது தேடலில் உடன்வர விரும்புபவர்கள் அங்கு வந்து, வாசித்து எதிர்வினையாற்றி,உரையாடி உதவலாம்.