பின்நவினத்துவம்,நவினத்துவத்தில் நுழையும் முன் ஒரு சின்ன முன் கதை சுருக்கம்.  நண்பனின் பரிந்துரையில் எஸ்.ராவின் உறுபசி படித்திருந்தேன். வழக்கமான கல்கி, ஜெயகாந்தன் மிஞ்சி போனால் சுஜாதாவை மட்டுமே படித்திருந்த எனக்கு அது முற்றிலும் புதிய அனுபவம். புரியாமல் இல்லை ஆனால் புரிந்துகொள்ள பகீரத பிரயத்தனம் தேவையாக இருந்தது. அடுத்து வாசிக்க தொடங்கியது ல.ச.ராவின் அபிதா. நண்பனுடன் உரையாடுகையில் முதல் நான்கு பக்கங்களை புரிந்துகொள்ள நான்கு முறை படிக்க வேண்டி இருந்ததாக கூறினான். நானும் அப்படியே உணர்ந்தேன். நேர் கோட்டில் தெளிவான நடையில் கதை கூறி வாசர்களிடம் விஷயத்தை சேர்பிக்க முடியும்பொழுது தலைசுற்றி மூக்கை தொட்டு வாசகனை ஏன் குழப்ப வேண்டும்?? வர்ணனைகள் அழகு சேர்க்கும் என்றாலும் தேவையற்ற/அதீத வர்ணனை ஏன்?? தங்கள் சொல்லாற்றலை/சொல்லாடலை/கற்ப்பனைதிறனை பறைசாற்றவா?? சில காலமாக என்னுள் இருந்த கேள்விகள் இவை. இதற்கும் தலைபிற்கும் ஒரே சம்பந்தம்  மேல் குறிபிட்ட இரண்டு புத்தகங்களையும் பின்நவினத்துவ வகையில் சேர்க்கலாம் என்பதே.
பின்நவினத்துவம் பற்றி பார்க்கும் முன் நவினத்துவம் (முன்நவினத்துவம்ன்னுலாம் சேர்த்து படிக்க கூடாது)  என்றால் என்ன?? முதலில் இவை ஒரு இலக்கியமுறை அல்ல. இலக்கியத்தில் சமுகத்தின் தாக்கம்..அவ்வளவே என்பதை தெளிவுபடுத்திவிடுகிறேன்.
இந்த இரண்டு கருத்துகளுமே ஆங்கில சமுகத்தில் இருந்து வந்தவை. ஆதலால் அதனை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.  19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இயந்திரமயமாக்கல் (industrialisation)…அதன் விளைவாக உண்டான புதிய நடுதர வர்கம்.. அறிவியல் முன்னேற்றம்.. பிரச்சனைகளுக்கு விஞ்ஞான காண கூடிய சாத்தியம்..இவைகளின் தாக்கத்தில்… மரபியல் முறைகளை கேள்வி கேட்க தொடங்கிய சமுகம்…மாற்றதிற்கான அதன் குரல்..இதன் வெளிபாடே நவினத்துவம்.
இதன் எதிரொலி அனைத்துவிதமான கலைகளிலும் ஒலித்தது. எளிதாக புரியவேண்டுமானால், ஓவியங்களை எடுத்துகொள்ளுங்கள்.  மரபியல் வழிகளான  (portrait/scenic) உருவபடம்,இயற்கை காட்சிகள் அல்லது ஏதேனும் ஒரு கருவை மையமாக கொண்ட ஓவியங்களை தாண்டி நவின ஓவியங்கள் (பேச்சு மொழியில் modern art) எல்லைகளை கடந்து விரிய தொடங்கின. புது முயற்சிகள் கட்டிட வடிவமைப்பில் ஏற்படுத்திய  மாற்றங்களை புரிந்து கொள்வது எளிது. இந்த தரவில் உள்ள கட்டிடங்களை பாருங்கள். எந்த வகையான மாற்றம் உண்டானது என புரிகிறதா இப்பொழுது??
இலக்கியத்தில் நடந்ததும் இதுவே. முறையான தொடக்கம்,முடிவு,கரு,நீதி அல்லது குற்பிட்ட சமுக பிரிவுக்கென மட்டுமே படைக்க படுவது போன்ற வட்டத்தை தாண்டி ஆங்கில இயக்கியம் விரிய தொடங்கியது. இதற்கு முன் தொடபடாத விஷயங்கள் பற்றி எழுத தொடங்கினர்(எ.கா. சமுகத்தில் ஒடுக்கபட்டோர்). எழுதும் விதங்களில் பல புது முயற்சிகள்…கதை நாயகனின் கோணத்தில் இருந்து கதை சொல்லுவது.. (first person) தொடர்ச்சியாக கதை சொல்லாமல் கோர்வையான நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லுவது..பொருட்களுக்கு மிருங்களுக்கு உணர்வு தருவது..என பல மாற்றங்கள். (சமுக கருத்தாக நவினத்துவம் )
தமிழ் இலக்கியத்தில் நவினத்துவத்தை குறிக்க வேண்டுமானால் பாரதி,பாரதிதாசன்,புதுமைபித்தன் போன்றோறை எ.கா.ட்டாக கூறலாம். பாவேந்தர் பற்றி எதுவுமே தெரியாது. பாரதியையும் முழுதாக படித்துள்ளேன் என கூற முடியாது. ஆதலால் புதுமைபித்தனுக்கு வருவோம். சமுகம் ஏற்க மறுக்கும் கரு கொண்ட இது போல் பல கதைகள். ஒடுக்க பட்டோரின் (பிச்சைகரர்கள்,கூலி தொழிலாலர்கள்..) வாழ்வை படைப்பாக்குவதே புரட்சிதானே??
தமிழ் இலக்கியத்தின் நகதைகளம் கொண்டு பார்க்கையில் புதுமைபித்தனில் தொடங்கி… சமகால பெண்ணியம், தலித்,திருநங்கைகளின் வாழ்வை சொல்லும் படைப்புகள் அனைத்துமே நவினத்துவ இலக்கியம்தான்.  கதை சொல்லும் முறைகள் என பார்க்கையில் (நான் படித்த வரை) சுஜாதா கவனம் ஈர்க்கிறார். எ.கா. அவன் படி


ங்
கி
னா
ன்.
(புத்தகத்தில் படி போலவே இருக்கும்)
கவிதைகளில் சொல்லவே வேன்டாம், மரபு கவிதைகளின் விதிகளை மீறி படைக்கபட்ட அனைத்தும் புது கவிதைகளுமே நவினத்துவ இலக்கியம்தான்.
அப்பொழுது பின்நவினத்துவம்???
மீண்டும் ஆங்கில சமுகம் பக்கம் செல்வோம். இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற பொழுது சமுகத்தின் மீதான கோபம், நிருவபட்ட சமுக அமைப்புகளின் மீதான கோபம்,தர்க்க ரீதியான வாதங்களுக்கு எதிரான சீற்றமே பின்நவினதுவதிற்கான வித்து. கட்டமைப்புகளுக்குள் அடங்க  மறுக்கும், இதுதான் சரியென எதுவும் இல்லாத ஒரு சமுகசூழல்.
இலக்கியத்தில் இந்த சமுகமாற்றத்தின் எதிரொலியே பின்நவினத்துவ இலக்கியம். நிகழ்வுகளில் இருந்து விலகி உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்தது. நவினதுவத்திற்கும் பின்நவினதுவத்திற்கும் அதிக வித்தியாசம் இல்லை எனினும் கோர்வையில்லாத கருத்துகளை கூறுதல் நவினதுவத்தில் ஏற்கபடாததாக இருந்தது. குழப்பங்கள் தவிர்க்க பட்டன..அல்லது குழப்பங்களை தீர்ப்பவனவாக கதையின் கதாபாத்திரங்கள் இருந்தன. அவன் அதை செய்தான் என கூறும் நவினத்துவத்தில் இருந்து.. அவனது மனதை..எதனால் அதை செய்தான்..அந்த முடிவெடுக்கையில் அவனது மன ஓட்டங்கள் என்ன என அலசுவது பின்நவினத்துவம்!  மேலோட்டமாக சமந்தமில்லாத விஷயங்களை கூறி இழையோடும் இழையை வாசகரின் முடிவுக்கு விடுதல் என பல பரிமானங்கள். இந்த மாற்றம் ஏற்பட்டது எந்த கூட்டு முயற்சியாலும் அல்ல. ஆதலால் இங்கு இப்படி தொடங்கியது அல்லது இப்படி இருக்க வேண்டும் என்று எந்த கட்டுபாடுகளும் இல்லாததாக இருக்கிறது. நீங்கள் நாளை புதிதாக எதாவது முயற்சித்து பின்நவினத்துவ இலக்கியம் எனவும் கூறிகொள்(ல்)ளலாம்.
முக்கியமாக பின்நவினத்துவம் எனபடுவதால் அது நவினத்துவதிற்கு பின் வந்தது என கொள்ள வேண்டாம்.  நவினதுவத்தின் சில கருத்துகளை கேள்வி கேட்க.. மாற்ற முனைவோறின் முயற்சியே பின்நவினத்துவம்.  நவினத்துவம் இப்பொழுதும் இருக்கிறது!
இது ஆங்கில இலக்கியத்தில்!
தமிழ் இலக்கியத்தில் பின்நவினத்துவ முறையில் புத்தகங்கள் எழுதபடுகின்றன. இப்பொழுதுக்கு  மேல்நாட்டில் பரவலாக  இருக்கும் பின்நவினத்துவ சித்தாந்தங்கள்/முறைகளை பின்பற்றி படைக்கபடும் இலக்கியங்கள் பின்நவினத்துவ இலக்கியங்கள் என கூறபடுகிறது.
ஆனால்.. தமிழ் சமுகத்தில் பெரும் மாற்றம் ஏற்படாமல்…பின்நவின சமுகம் என ஒன்று இல்லாத பொழுது படைக்கபடும் இலக்கியங்களை பின்நவினத்துவ இலக்கியம் என எப்படி கூறலாம்??
நவினத்துவம்…விடுதலைக்கு பின்னான தமிழ் சமுகத்தில் ஏற்பட்ட மாற்றம்.. கட்டுகளுக்கு அடங்காமை…ஜாதி எதிர்ப்பு..திராவிட பெருமை..எழுத்து சுதந்திரம் என சமுகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் இலக்கியத்தின் மீதான தாக்கமே புதுகவிதை என எண்ணுவது சரிதானே?? அதனால் தானே அனைவராலும் ஏற்றுகொள்ள பட்டது?? ரசிக்கபட்டது?? இன்றும் நிலைத்து நிற்கிறது??  மரபில் இருந்து நவினதுவத்திற்கு பயணிக்க தமிழ் சமுகத்தில் இடம் இருந்தது.
ஆனால் அதே போல் பின்நவினத்துவத்தை ஏற்றுகொள்ள / இன்னொரு மாற்றதிற்கு தமிழ் சமுகம் தயாரா இருக்கிறாதா ??
நவினதுவத்தில்,மேற்கில் நடந்த மாற்றங்களும் தமிழில் ஏற்பட்ட மாறங்களும் குணத்தால் ஒன்றானாலும் கட்டமைப்புகள் மாறுபடவே செய்கின்றன. அதுபோல் இன்னொரு பரவலான சமுக மாற்றதின் (broader social change) மூலம் பிறக்கும் இலக்கியமுறையைதானே தமிழின் பின்நவினத்துவ இலக்கியம் என கூற முடியும்??
வாரமலரில் வரும் அளவிற்கு புதுகவிதைகளும்,புதியமுறை சிறுகதைகளும் சமுகத்தின் அனைவராலும் ஏற்றுகொள்ள புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?? அதேபோல் அனைவரலாலும் ஏற்க கூடியதாகதானே பின்நவினத்துவம் இருக்க வேண்டும்?? இலக்கியவாதிகள்,இலக்கியங்கள் என கூறி சமுகத்தில் இருந்து விலகியிருக்கும் தனி உலகமாக தானே இன்றைய பின்நவினத்துவம் இருக்கிறது??
பின்நவினத்துவம் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லாத பொழுது, தமிழக சமுக சூழலுக்கு ஏற்ப ஏற்பட வேண்டிய மாற்றத்தை ஏன் ஆங்கில பின்நவினத்துனத்தை பின்பற்றி நாமாக கொண்டுவர வேண்டும்..??
சமுக மாற்றதின் எதிரொலியாக இருக்கவேன்டிய மாற்றம் வலுக்கட்டாயமாக தமிழ் இலக்கியத்தில் திணிக்கபடுவதில்  தனிபட்டமுறையில் எனக்கு உடன்பாடு கிடையாது.