ஓட்டு மொத்த ஈழ தமிழரின்  ஒரே கோரிக்கை “தனி ஈழம்”, பொது வாக்கெடுப்பு நடத்தி அதன் முடிவுகளின் படி ஈழம் அமைக்க வேண்டும் என்பது. இப்பொழுது போராடிவரும் மாணவர்களின் கோரிக்கையும் ஐநா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே. ஆனால் சிலரோ அது சாத்தியமில்லை, தனி மாநிலம் சம உரிமை போன்றவை வேண்டுமானால் கோரலாம் ஆனால் தனி ஈழம் கிடைக்க வாய்ப்பே இல்லை என பேசி வருகின்றனர். அதற்கு பதிலாய் சிலர் சூடான் மற்றும் டைமூரில் நடந்த பொது வாக்கெடுப்பை காமித்து சாத்தியம் தான் என பேசி வருகின்றனர். நிஜத்தில் ஈழம் சாத்தியமா? வாருங்கள் வரலாற்றை கொஞ்சம் புரட்டி பார்ப்போம்.
ஈழம் தனி நாடாக உருவெடுக்க, இதுவரை தனி நாடுகள் எப்படி உருவாகின என பார்ப்போம். கடந்த 20 ஆண்டுகளில் குறிப்பிடும் படியாக சுதந்திரம் அடைந்தவை தெற்கு சூடான், கிழக்கு டைமூர் மற்றும் சோவியத் யூனியன் உடைந்த பொழுது, யுகோஸ்லேவியா உடைந்த பொழுது உருவான நாடுகள். அதற்கு முன் அனைத்தும் காலணி ஆதிக்கத்தில் இருந்து புரட்சியின் மூலம் சுதந்திரம் அடைந்தவை.  இதில் மிக சமீபமாக உருவானது தெற்கு சூடான். கொஞ்சம் ஆழமாகவே அதன் வரலாற்றை பார்க்கலாம்…
சூடான் ஐக்கிய ராஜ்ஜியம் மற்றும் எகிப்த்தின் கூட்டு கட்டுபாட்டின் கீழ் இருந்த ஒரு காலணி, டிசம்பர் 19, 1955 சூடான் பாராளுமரம் தன் சுதந்திரத்தை அறிவிக்கிறது. ஜனவரி ஒன்றாம் தேதி எகிப்த் மற்றும் ஐக்கிற ராஜ்ஜியம் சூடானின் சுதந்திரத்தை அங்கீகரிக்கிறது (On 19 December 1955 the Sudanese parliament, unilaterally and unanimously, declared Sudan’s independence. The British and Egyptian Governments recognized the independence of Sudan on 1 January 1956.) சூடானின் சுதந்திரத்தை முதன்முதலில் அங்கீகரிக்கும் பெரும் சக்திகளுள் அமெரிக்காவும் அடக்கம்.
தென் மற்றும் வட சூடான் என இரண்டு பிரிவுகளை கொண்டது சூடான். தெற்கு சூடான் தொடர்ந்து பொருளாதார புறக்கணிப்பு மற்றும் பின்னடைவை சந்தித்து கொண்டு இருந்தது, ஆட்சியாளர்கள் வடசூடானில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தனர். சஹாரா அருகே உள்ள வடசூடான் வறட்சியால் பாதிக்கப்பட, நைல் கரையில் உள்ள தெற்கு சூடானின் செழிமையான பகுதிகளை அரசு கையாக படுத்த முயன்றது. மற்றும் தென் சூடானில் உள்ள எண்ணை வளங்களையும் வட சூடான் உபயோகிக்க தொடங்கியது. இதை எதிர்த்து சிறு புரட்சிகள் நடந்த வண்ணம் இருந்தன. இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள வடசூடான் ஆட்சியாளர்கள் ஷரீ அத் சட்டத்தை அமூல் படுத்துகிறார்கள். இது மற்ற இனத்தை சேர்ந்த தென் சூடான் மக்களை மேலும் ஆத்திரபடுத்துகிறது.  1983ல் Sudan People’s Liberation Army (SPLA) (சூடான் மக்கள் விடுதலைக்கான ராணுவம்) தொடங்கபடுகிறது. தனி தெற்கு சூடான் வேண்டி மக்கள் போராட்டம் வெடிக்கிறது.  இனி நடப்பவை தான் நமக்கு முக்கியம்…
22 வருடங்கள் நடந்த இந்த போராட்டத்தில் 20 லட்சம் மக்கள் நேரடி போரினாலோ அல்லது தான் விளைவான பஞ்சம் அல்லது நோயினால் கொல்லப்பட்டனர். 40 லட்சம் மக்கள் குடிபெயர்க்கிறார்கள் பலர் பலமுறை.
ஆரம்பத்தில் இருந்தே அருகில் உள்ள எத்தியோப்பியாவில் மாக்ஸிஸ்ட் ஆதரவாளர்கள் அதிகமாக உள்ளதால் சூடான் அரசுக்கு சாதகமாக செயல் பட்டு வந்தது அமெரிக்க அரசு. ஆனால் சூடான் 1990களில் சதாம் ஹுஸைனுக்கு ஆதரவாக செயல்பட தொடங்கியபின் தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்கிறது.
இடையில் சூடானில் ஐநா operation life-line sudan என்ற முன்னெடுப்பின் மூலம் உணவு மற்றும் மற்ற உதவிகளை செய்கிறது.  ஐநாவின் பெயரில் செய்யப்பட்டாலும் இதிலும் அமெரிக்காவின் கையே ஓங்கி நிற்கிறது The U.S. was a major donor in the March 1989 “Operation Lifeline Sudan,” which delivered 100,000 metric tons of food into both government and SPLA-held areas of the Sudan, thus averting widespread starvation. In 1991, the U.S. made major donations to alleviate food shortages caused by a two-year drought.  செப்டம்பர் 2001ல் அமெரிக்கா Presidential Envoy for Peace in the Sudan ‘சூடானில் அமைதிக்கான அதிபரின் சிறப்பு தூதராக’  U.S. Senator John Danforthஐ நியமிக்கிறது. His role was to explore the prospects that the US could play a useful catalytic role in the search for a just end to the civil war, and enhance humanitarian services delivery that can help reduce the suffering of the Sudanese people stemming from war related effects. மக்கள் போராட்டத்திற்கு நியாயமான தீர்வு கிடைக்க மற்றும் வன்முறை தொடர்பான பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் அமெரிக்கா என்ன செய்ய இயலும் என கண்டறிவது அவரது பொறுப்பு. இன்று வரை தொடர்ந்து வெவ்வேறு தூதர்களை அமெரிக்கா நியமித்து வருகிறது. மேலும் 2002ல் The Sudan Peace Act என்ற சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றுகிறது. இதன் மூலம் சூடானில் நடந்த இனப்படுகொலையை சாடி தீர்மானம் நிறைவேற்றியது. மேலும் சூடான் மக்கள் நலனுக்காக ஆண்டுதோறும் $100,000,000 செலவு செய்ய அதிபருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. the Act authorized the President of the U.S. to seek a UN Security Council resolution for an arms embargo and to actively seek other financial and diplomatic methods to influence the conduct of the Sudanese Government. மற்றும் பொது வாக்கெடுப்பிற்கு சூடானைஒப்புக்கொள்ள வைக்க அமெரிக்கா பல முயற்சிகளை மேற்கொள்கிறது. சூடான் மீது வணிக தடை அமுல் படுத்துகிறது. தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடாக சூடானை பட்டிட்டியலிடுகிறது. தொடரும் சர்வதேச அழுத்தத்தை தொடர்ந்து 2011ல் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது  98% மக்கள் தனி தென் சூடானுக்கு வாக்களிக்கின்றனர்!  மேலும் சூடான் அதிபர் ஒமர் அல் பஷீர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுகிறது. இனப்படுகொலைக்கு பல வழிகளில் காரணமாக இருந்தார் என முடிவு செய்யப்பட்டு கைது உத்தரவு பிறப்பிக்கபடுகிறது.
இதுவரைக்கும் எல்லாமே நல்ல தான் போயிக்ட்டு இருக்கு, ஈழத்துல கூட இப்படி நடந்திருக்கலாம் ஆனா என் நடக்கல??? மேல படிங்க…
சூடான் நாட்டின் எண்ணை வளங்களில் 80%க்கும் மேல் தென் சூடானில். உலகின் மிகவும் பின்தங்கிய ஒரு நாட்டின் கட்டுபாட்டில் இவ்வளவு வளம். நாட்டின் நிலவும் பஞ்சம், உள்நாட்டு கலவரம், அரசியல் நிலையிமை போன்றவற்றை சரி செய்து தென் சூடான் தன்னை ஆட்சி செய்து கொள்ள அனைத்து உதவிகளையும் அமெரிக்கா செய்யும். பதிலுக்கு அமெரிக்காவிற்கு அங்குள்ள எண்ணை வளங்கள் மீது மறைமுகமாகவாவது உரிமை கிடைக்கும். strategically important region, மிகவும் முக்கியமான ஒரு பகுதியில் பாதுகாப்பு மறுவாழ்வு உதவிக்காக பெரும் படையை எந்த எதிர்ப்பும் இல்லாமல் குவிக்கலாம். சரி இதை செய்ய ஏன் போராளிகளை ஆதரிக்க வேண்டும்? சூடான் அரசுக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்களை எதிர்த்து இருக்கலாமே…. இருக்கலாம் தான் ஆனா பாருங்க.. 2010ல் இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டு கைது உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. Arab League மற்றும் African Union உடனடியாக கைது உத்தரவை கண்டிக்கின்றன. அதன் பின்பு ஒமர் எகிப்த், கத்தார் (Qatar), ஊகாண்டா, கென்யா, லிபியா போன்ற நாடுகளுக்கு சென்று வருகிறார். ( சர்வதேச கைது உத்தரவு பிரபிக்கப்பட்ட ஒருவர் அந்த நாட்டில் நுழைந்த உடனே கைது செய்யப்பட வேண்டும் என்பது சட்டம்) 2010ல் “நண்பன் மற்றும் சகோதரனாக” சீன தலைவர் ஓமரை வரவேற்று இரு நாடுகளுக்கிடையே நட்பு பாராட்டுகிறார்.
அரேபியா மற்றும் முஸ்லிம் நாடுகளுக்கு இயல்பாகவே இருக்கும்  அமெரிக்கா எதிர்ப்பு மனோபாவம் மற்றும் சீனா இந்த பகுதியில் காட்டி வரும் ஈடுபாட்டை நிலை செய்ய தென் சூடான் அமெரிக்காவிற்கு அவசியமாகிறது!
மற்றவை அனைத்தும் eye wash..!
அடுத்து East Timor, இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக இருந்த சிறு நாடு. இங்கும் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சுதந்திரம் வழங்கப்படது ஆனால் இங்கு நிலமை வேறு. சுஹர்டோ அதிபராக இருந்தவரை டைமூர் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்தது. இந்தோனேஷியாவின் பொருளாதார பின்னடைவு மற்றும் சுஹர்ட்டோவின் வீழ்ச்சிக்குபின்  military operations in East Timor were costing the bankrupt Indonesian government a million dollars a day டைமூரில் தொடர்ந்து ஆட்சி செலுத்துவது இந்தோனேசிய அரசுக்கு பெரும் சுமையாக இருந்தது. அதனால் பொது வாக்கெடுப்புக்கு ஒப்புக்கொண்டு…  rest is history.
அதனால் மேற்குறிபிட்ட இரண்டையுமே ஈழத்திற்கு முன்னுதாரணமாக கொள்ள முடியாது. மேலும் இஸ்ரேயில், பாலஸ்தீனம், சைபீரியா மற்றும் பல இடங்களில் நடக்கும் போர் குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை கண்டுகொள்ளாமல் சூடான் இப்பொழுது ஈழம் குறித்து அமெரிக்கா கவலை கொள்வது ஏன்??
தெற்க்காசியாவில் சீனாவின் ஆதிக்கம் அதிகம். கம்யூனிச நாடுகளும் அதிகம். அமெரிக்காவின் நேச நாடுகள் எதுவும் இங்கு அதிகமாக இல்லாத நிலையில் அமெரிக்காவிற்கு இங்கு ஒரு base அவசியம் தேவை. இலங்கை அதற்கு சரியான தீர்வாக அமையும். மேலும் இந்தியா மகா சமுத்திரத்தின் வழியே நடக்கும் வணிக பரிமாற்றங்களை கண்காணிக்க இலங்கை மிகச்சரியான தேர்வு. சீனாவுடன் நட்பு பாராட்டிவரும் இலங்கையை அமெரிக்காவின் கட்டுபாட்டில் கொண்டு வர ஐநா தீர்மானம் வழி செய்யும்.  இங்கு தனி ஈழத்திற்கு வழி செய்வது எந்த வகையிலும் அமெரிக்காவிற்கு சாதகமாக அமையப்போவதில்லை மேலும் அது  இலங்கையை சீனாவிற்கு இன்னும் நெருக்கமாக்க கூடும். அமெரிக்கா வேண்டும் சர்வதேச விசாரணை இலங்கைக்குள் நுழைய, அதன் கட்டுபாட்டை நிலைநிறுத்த அவ்வளவுதான்! நீதி விசாரணை அதன் வெளிப்பாடு மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்க வெளியுறவு துறைதான் முடிவு செய்ய வேண்டும்.
மாணவர்கள் கோருவது போல் ஒரு கடுமையான தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வந்தால்?? எத்தனை நாடுகள் ஆதரிக்கும் என்பது கேள்விக்குறி.. அதனை தாண்டி அந்த தீர்மானத்தை யார் முன்னெடுத்து செயல்படுத்துவது??? அதற்கு தேவையான சர்வதேச ஒத்துழைப்பு நமக்கு கிடைக்குமா??? மேலும் அப்படி ஒரு முடிவை இந்தியா எடுக்கையில் பல கேள்விகள் எழும். காஷ்மீரில் ஐநா முடிவு செய்த பொதுவாக்கெடுப்பு இன்னமும் நடத்தப்படவில்லை (பெரும்பான்மை முஸ்லிம்கள் உள்ள பகுதி, இந்து மன்னரின் முடிவுக்கிணங்க இந்தியாவில் இணைந்தது, இங்கு பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என உறுப்பினர்களை கட்டுபடுத்தாத  விதியின் கீழ் ஐநா தீர்மானம் நிறைவேற்றி உள்ளது), வட கிழக்கு பகுதிகளில் நடக்கும் அடைக்குமுறை வன்முறைகள் எந்த விதத்தில் இலகையில் நடந்த கொடூரங்களுக்கு குறைவில்லை. 10 ஆண்டுகளாக ஈரோம் ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்து வருகிறார், அரசு அமைதி காக்கிறது. இதை விட முக்கியமாக இலங்கையை பகைத்தால் சீனாவும் இலங்கையும் கை கோர்க்கும். ஏற்கனவே பாக்கிஸ்த்தானுடன் போர், மேலும் ஒரு அண்டை நாட்டுடன் உறவை கசப்பாக்கிக்கொள்ள இந்தியா விரும்பாது.
இந்நிலையில் தனி ஈழம் சாத்தியப்படுமா??? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.