சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் சில வேண்டுகோள்களை முன்வைத்து தொடர்ந்து 3வது நாளாக இன்று உண்ணாநிலைப் போராட்டத்தில்…தவிர்க்க இயலா காரணத்தால் செவ்வாய் வரை அவர்களுடன் பங்கேற்க இயலாத நிலையில் இப்பொழுது இயன்றது ஒரு பதிவுதான் …!
கடந்த வருடம் கிட்ட தட்ட இதே நேரம், Channel 4 ஒரு ஆவண படம் வெளியிட்டபின் #KillingFields என்று ஒரு tag. என் உணர்ச்சிகளை வெளிக்கொட்ட கிடைத்த முதல் ஊடகம். கொஞ்சம் அதிகமாகவே பொங்கி எழுந்தேன். பின் வழக்கம்போல் மறக்கப்பட்டது அதுவும். இன்று #LoyolaHungerStrike.
சென்ற வருடம் இதே நேரம் #KillingFields + #March18Marina # tag மாறுகிறது காட்சி மாறவில்லை…. #LayolaHungerStrike
— 老子(லாஓசி) (@_santhu) March 9, 2013
சென்ற வருடம் மகத்தான எழுச்சியை கண்டது இணையம், ஆனாலும் ஒரு வருடம் கழித்து இன்றும் அதே கோரிக்கைகளுக்காக போராட வேண்டி இருக்கிறதே….. What have we achieved??
இந்த கேள்விக்கு பிறகு வருவோம்…
அதற்கு முன், இந்த போராட்டத்தை ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்துடன் ஒப்பிடுதல் சரியா????
47 வருடங்கள் முன் நடந்த நிகழ்வு, இன்று 65+ வயதிருப்பவர்களுக்கு மட்டுமே நினைவிலிருக்க கூடிய விஷயம். கேள்வி பட்டு அறிவதை விட கொஞ்சம் வாசித்து உண்மை அறியலாம் என முற்பட்டேன்.
1945ல் சுதந்திரம் கிடைத்திருந்தாலும், அரசியல் சாசனம் எழுதப்பட்டு இந்தியா குடியரசு நாடாக உருமாறியது 26 ஜனவரி 1950ல் தான். அன்றில் இருந்து 15 வருடங்கள் அதாவது 1965 வரை பாரதத்தின் அலுவல் மொழி ஹிந்தி மற்றும் ஆங்கிலமாகவும், அதன் பின் ஹிந்தி மட்டுமே இருக்குமென Article 343ல் குறிப்பிடபட்டது. மேலும் Article 345ன் படி நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்குமிடையேயான அனைத்து தொடர்புகளும் ஹிந்தியிலேயே இருக்கும். இது போன்ற கட்டாய ஹிந்தி திணிப்புக்கு தொடர்ந்து எதிர்ப்பு இருந்து வந்தது. குறிப்பிட்ட தேதி நெருங்க நெருங்க உஷ்ணம் கூடுகிறது. The Tamil Nadu Students Anti Hindi Agitation Council தொடங்கப் படுகிறது. குடியரசு தினத்தை ஒற்றுமையாக கொண்டாட மொழி மாற்றதிற்கான திகதியை ஒரு வாரம் தள்ளிப்போட பிரதமரிடம் அண்ணாதுரை வேண்டுகிறார். அவர் மறுத்துவிடவே 26, ஜனவரி 1965ஐ துக்கநாளாக அனுசரிக்க படுமென அண்ணா அறிவிக்கிறார். மதராஸ் முதல்வர் பக்தவச்சலம் “குடியரசு தினத்தின்” புனிதத்தை மாசுபடுத்த முயல்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாணவர்கள் அரசியலில் ஈடுபட கூடாது எனவும் சொல்கிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா உட்பட பலர் கைது செய்ய்ப்படுகிறார்கள். தொடர்ந்து ஜனவி 26ம் தேதி 50,000 மாணவர்களை கொண்ட ஒரு பேரணி தலைமை செயலகம் செல்கிறது, ஆனால் மாணவர்களை சந்திக்க வேண்டிய அவசியமில்லை என பக்தவச்சலம் மறுக்கிறார். மறுநாள் மதுரையில் திலகர் திடல் நோக்கி ஒரு மாணவர் பேரணி நடைப்பெறுகிறது.. அப்பொழுதுAs the procession approached the Congress Party district office at North Masi Street, some Congress “volunteers” who had arrived in a Jeep shouted insults and obscenities at the students. A volley of sandals from the students returned the insult. The provoked Congress volunteers, who ran back into the Party’s office, returned with knives and attacked students, wounding seven (Hardgrave, Robert L. (August, 1965). “The Riots in Tamilnad: Problems and Prospects of India’s Language Crisis”. Asian Survey (University of California Press) 5 (8): 399–407. doi:10.1525/as.1965.5.8.01p0095g. JSTOR 2642412.)
இதை தொடர்ந்து போராட்டம் வெடிக்கிறது, தொடர் போராட்டம் சில இடங்களில் வன்முறையாகவும் உருவெடுக்கிறது. இரண்டு வாரங்கள், பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் தாக்கத்தை அனைவருமே அறிவோம். தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த இரு மந்திரிகள் பதவி விலகுகிறார்கள். ( விலகலை குடியரசு தலைவர் ஏற்க வில்லை என்பது தனி விஷயம்.) தொடர் போராட்டத்தை தொடர்ந்து February 11ம் திகதி லால் பகதூர் சாஸ்திரி, அகில இந்தியா வானொலியில் கீழ் கண்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.
Every state will have complete and unfettered freedom to continue to transact its own business in the language of its own choice, which may be the regional language or English. Communications between one State to another will either be in English or will be accompanied by authentic English translation. The non-Hindi states will be free to correspond with the Central Government in English and no change will be made in this arrangement without the consent of the non-Hindi States. In the transaction of business at the Central level, English will continue to be used. The All India Civil Services examination would continue to be conducted in English rather than in Hindi alone.
இதை தொடர்ந்து போராட்டத்தின் தீவிரம் குறைகிறது. ஆனால் அந்த அலட்சிய போக்கினால் மீண்டும் எப்பொழுதும் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் இழந்தது.
அன்றைய மாணவர்கள் சாதித்தது மிகப்பெரிய விஷயம். ஆனால் இன்றைய நிலை என்ன..???
இன்று இப்படி ஒரு போராட்டம் நடந்ததற்கான நினைவுகள் எதுவுமே நம்மிடம் மிச்சமில்லை. சிறுவனாக நான் அதிகம் கேள்வி பட்டதெல்லாம், மாணவர் போராட்டம் பள்ளி/கல்லூரி மூடப்பட்டது, என் படிப்பு பாதிக்கப்பட்டது என்ற புலம்பல்கள் தான். மேலும் பலர் எல்லாம் இந்த அரசியல் வாதிகளால் தான் நான் இந்தி படிக்கல, இல்லனா எங்கையோ போய் இருப்பேன்னு.
அரசியல்நிலை அதேதான், சாஸ்திரியின் ஹிந்தி ஆதரவு மனப்பான்மையும், சோனியாவின் இலங்கை ஆதரவு மனப்பான்மையும் ஒன்று தான். ஆனால் மாணவர்கள்??
ஹிந்தி எதிர்ப்பு என்பது அவர்களது வாழ்வாதாரத்தை அசைப்பதாக இருந்தது. அரசு தேர்வுகள் ஹிந்தியில் நடந்தால் தேர்ச்சி என்பது வெறுங்கனவு. இன்றோ இலங்கை தமிழர் என்பது எங்கோ வெளிநாடு! மற்றும் அன்றைய தமிழர் சினிமா பார்த்து, பேச்சை கேட்டு மயங்கி போனார்கள், அதற்கு கட்டுபட்டார்கள் என குற்றம் சுமத்தினாலும் உணர்ச்சி மிக்கவர்களாக இருந்தனர். 9 பேர் தன் உயிரைய் தமிழுக்கு கொடுக்க முன்வந்தனர். இன்றைய மாணவர்களுக்கு செங்கொடியையும் முத்துக்குமாரனையும் தெரியுமா??
மாணவர்களை குறை சொல்ல வில்லை. கலை கல்லூரிகள் அதிகம் இருந்த காலத்தில் உலகை கற்றுக் கொள்ள அதிக வாய்ப்பு இருந்தது. இன்றைய பெரும்பான்மை, பொறியியல் கல்லூரிகளின் பொறியில் சிக்கிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு நாள் விடுப்பு எடுத்தாலும் பெற்றோரை அழைத்து வர வேண்டுமென்பது அவர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம். நவீன சிறைச்சாலையில் அடைபட்டு கிடப்பவர்களுக்கு சுதந்திரத்தின் சுவை அறியப்படாத ஒன்று. மனப்பாடம் செய்து கக்குவதிலும், assignments, reports, recordsஐ தாண்டி செய்தித்தாள் மூலமாகவோ புத்தகங்கள் மூலமாகவோ உலகை பார்க்கும் வாய்ப்பு மிகக்குறைவு. அதனால் தான் லயோலா மாணவர்களின் இந்த முயற்சிக்கு தமிழகம் முழுதும் எந்த வகை ஆதரவு இருக்குமென கவலையுடன் எதிர் நோக்குகிறேன். தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் திரண்டு எழா விட்டால் மத்திய அரசு அல்ல உள்ளூர் ஊடகத்தின் கவனத்தை கூட நம் பக்கம் திருப்ப இயலாது. உண்ணாவிரத போராட்டங்களும் இரண்டாம் பக்க பெட்டி செய்தி இன்று.
இவர்கள் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்குமா என்ற ஆதங்கத்தில் இது எழுதப்படுகிறதே தவிற, இவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவையும் பிழைகள் பதிவு செய்கிறது.
இவர்களின் போராட்டம், கோரிக்கை , இந்தியா அரசின் சமீப செயல்பாடுகள் பற்றி அறியாதவர்களுக்கு ஒரு சிறு குறிப்பு:
முதலில் ஐநா. ஐநா சபையின் மனித உரிமை ஆணையம், United Nations Human Rights Council ஜெனிவாவில் கூடுகையில் உலகம் முழுதும் எழும் மனித உரிமை மீறல் குறித்த செய்திகளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்கும். அவர்களின் பல தீர்மானங்களில் கையொப்பமிட நாடு இலங்கை. அகதிகள், போர் குற்றவாளிகள் போன்றவர்களை எப்படி கையாள்வது போன்ற நெறிமுறைகளும் civilians எனப்படும் போராளி அல்லாதவர்கள் மீது தாக்குதல் கூடாது என்பதும் சில வகை ஆயுதங்களை (eg sulphur bombs, cluster bombs) உபயோகிக்க கூடாது போன்றவை இதில் அடக்கம். கவனிக்க, இரு எதிரி நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் இவை. தன் சொந்த மக்கள் மீதே இந்த நெறிமுறைகளை மீறி தாக்குதல் நடத்திய இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஒரு தீர்மானம் கொண்டு வர போகிறது. இலங்கை அரசு தானே ஒரு குழு நியமித்து, தன் மீது சுமத்த பற்ற குற்றங்களை தானே விசாரித்து சமர்பித்த LLRC என்ற அறிக்கையை ஏற்க இயலாது என சென்ற வருடமே அமெரிக்க கூறி விட்டது. இப்பொழுது அது கொண்டு வரப்போகும் தீர்மானத்தின் வரைவு கீழே
இந்த தீர்மானதிற்கு ஆதரவாய் வாக்களிக்க இந்தியா தயங்குகிறது. ஐநாவில் தீர்மானம் நிறைவேறப்பட்டால், இலங்கை அந்த தீர்மானத்தின் படி நடக்கவில்லை என்றால் உலக நாடுகள் பொருளாதார தடை உட்பட பல வகை நடவடிக்கைகள் எடுக்கலாம்.
இந்த தீர்மானத்தின் முக்கிய அம்சம், ஐநா பார்வையாளருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட வேண்டும். மற்றும் சர்வ தேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த இரண்டும் இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக இருப்பதால் இந்த தீர்மானத்தை ஆதரிக்க இயலாது என்பது இந்தியா அரசின் வாதம். இதனை ஒட்டி எழுந்த விவாதத்தில் தான் தயாநிதி மாறன் எல்லாம் நீலி கண்ணீர் வடித்தார்கள்.
//India also needs to strengthen diplomatic steps to avoid a war in the island nation, said the minister while stating that he shared the sense of the house.//
வெளியுறவு துறை அமைச்சரின் வாதம் பாருங்கள். அந்த தீர்மானதிற்கு ஆதரவு அளிப்பதால் இலங்கையுடன் போர் எழுமாம்.
சரி, நம் மாணவர்களின் கோரிக்கை என்ன?
இதில் எவையெல்லாம் சாத்தியம் என்று தெரியவில்லை. சர்வதேச விசாரணை வேண்டு அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிக்க மறுக்கும் இந்தியா எப்படி தானாக ஒரு தீர்மானம் கொண்டு வரும்?
இவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறினால் தமிழனாய் பிறந்ததற்கு பெருவகை கொள்வேன் என்றாலும், கற்பழிப்பிற்கு எதிராக ஒரு சட்டம் கொண்டு வரும் அளவிற்கு கூட ஒற்றுமை இல்லாத மந்திரி சபை கொண்ட இந்தியானாய் பிறந்ததற்கு வெட்க படும் நிலையே தொடரும் என்பது நிதர்சனம்.
இவர்களது கோரிக்கை நிறைவேறா விட்டாலும் இவர்கள் சாதிக்கப்போவது நிறைய. ஓட்டு மொத்த தமிழகத்தின் கவனமும் இவர்கள் மீது. ஒரு சசி பெருமாளால் மாநிலத்தை மது விலக்கு பற்றி பேச வைக்க இயலுமென்றால் 8 சிங்கங்கள் என்னவெல்லாம் செய்ய இயலும்? மற்றவர்கள் போல் அல்லாது மாணவர்கள் போராடுகையில் அடுத்த தலைமுறையின் கவனம் ஒட்டுமொத்தமாக திரும்பும். அவர்கள் இறங்கி போராட வேண்டாம். செய்தி அவர்களை சென்று அடைவதே மிகப்பெரிய விஷயம். மேலும் அதில் ஒரு சிறு பகுதி போராட தொடங்கினாலும் அதன் வீச்சு பெரிதாய் இருக்கும், தமிழகம் முழுதும் எதிரொலிக்கும். அரசியல் ஆதாயதிற்காகவோ எதற்கோ, அரசியல் கட்சிகள் சில முடிவுகள் எடுக்க நிர்பந்திக்கப்படலாம். யோசித்து பாருங்களேன், சாமி கண்ண தொறந்து திமுக மந்திரிகள் பதவி விலகினால்? தமிழக கட்சிகள் அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து குரல் கொடுத்தால்? வெறுங்கனவாய் தெரியும் இவையெல்லாம் இந்த போராட்டம் இதே போல் நீடித்தால் சாத்தியம்.
போராட்டம் மாணவர்கள் மட்டுமே செய்ய வேண்டுமென்று அல்லவே, உணர்ச்சி உள்ள அனைத்து தமிழனும் களம் இறங்கலாம்.
முதல் பொறி.. பற்ற வைத்து விட்டனர் நம் தம்பிகள்.. தீ கொழுந்து விட்டு எரிய செய்வது நாம் பொறுப்பு…
சிறு துளி அந்த 8 பேர்… பெரு வெள்ளமாக தமிழகம் திரல்வது சாத்தியமில்லாததா???
நண்பர்களே, நமது #tag அல்லது முகநூல் போராட்டம் வீண் அல்ல.. ஆனால் அது மட்டுமே போதாது அல்லவா???
என்ன செய்ய, என்னால் களத்தில் இறங்கி போராட இயலாது என்பவர்களுக்கு நான் சென்ற வருடம் எழுதிய twitlongerஐ பகிர விரும்பிக்கிறேன்.
தோழர்கள் அனைவருக்கும் சிறு வேண்டுகோள். இப்பொழுது நாம் #KillingFields கீச்சுவதன் நோக்கம் என்ன? அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்க வேண்டுமென்றா? அதான் இன்று ஆதரவு தருவதாய் பாரத பிரதமர் அறிவித்து விட்டாரே, இத்தோடு முடித்துகொள்வோமா??? இல்லை தீர்மானம் நிறைவேற வேண்டும் என்கிறீர்களா?? மார்ச்சு 23 தீர்மானம் நிறைவேறியவுடன் நிருத்திகொள்வோமா?? (தீர்மானமே உபயோகமற்றது என்ற கருத்து இருந்தாலும some thing is better than nothing)
நாம் என்ன செய்கிறோம் என்ன செய்ய விரும்புகிறோம்??? ஈழ தமிழரின் வாழ்வில் மாற்றம் தான் குறிக்கோள் என்றால், காஞ்சி மன்ற தோழி நேற்று குறிப்பிட்டதுபோல் விஷயம் அறிந்த நமக்குள் பேசிக்கொள்வதால் ஆகப்போவது என்ன? இணையத்தில் பேச வேண்டாம் என கூறவில்லை அனால் அதையும் தாண்டி செய்ய வேண்டியது நிறைய. பெரிதாய் எதுவும் வேண்டாம். உங்களால் இயன்ற சிறு சிறு முயற்சிகள்…
1) தமிழரில் ஈழத்தின் கோரம் அறிந்தவர் எதனை சதவிகிதம்? இணையத்தின் வெளியே நீங்கள் அறிந்த எத்தனை பேர் இதை பற்றி அறிவார்? ஊடகங்கள் கடமை செய்ய தவறும் பொழுது மக்களிடம் கொண்டு சேர்ப்பது நமது கடமை அல்லவா? இணையத்தில் பேசுவதை விட அதிகம் இதைபற்றி வெளியே பேசுங்கள், அனைவருக்கும் இதை பற்றி கூறுங்கள். நேற்று வந்திருந்த 2000 பேரில் டிவிப்ஸ் விரல் விட்டு என்ன கூடிய அளவுதான். சாலையில் போராடும் குணம் மற்றவரிடம் அதிகம், முடிந்த அளவு அவரிடம் உண்மையை கொண்டு சேர்ப்போம். பேருந்தில் பயணிக்கையில் பக்கதிருக்கை பயணியிடம், வீட்டு வேலை செய்பவர் முதல் சந்திக்கும் அனைவரிடமும் பகிர முயல்வோம்.
2) மற்றொரு தோழர் கூறியது போல் மாவட்டம் தோறும் உள்ள அகதிகள் மறுவாழ்வு முகாமில் அடைபட்டு கிடக்கும் உடன்பிறப்புகளுக்கு உங்களால் ஆன உதவிகள் செய்யலாம், பணமாக அல்லாமல் தகுதியானவர்களுக்கு வேலை வாங்கி தரலாம், அல்லது அடிப்படை கழிப்பிட வசதி கூட இல்லாதவரின் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம், மூன்று வேலை உணவு முழுதாய் உண்ண வழி இல்லாத நிலைமையில் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்க.உதவ பணம் வசதி இல்லை என்பது தடை இல்லை, உதவ பலர் தயாராய் இருக்கிறார்கள், உங்களிடம் நேரம் இருந்தால் இருவருக்கிடையேயான பாலமாய் இருக்கலாம்.
உங்கள் ஆதங்கத்தை பதிவதால் மட்டும் கடமை தீர்ந்து விட வில்லை, இங்கு தரும் குரலால் கடல் தாண்டி வாழ்வாரின் நிலையில் மாற்றம் உடனடியாக ஏற்ப்பட போவதில்லை, நமதருகில் நம்முன்னே வாழ்பவரின் வாழ்வில் மாற்றம் கொண்டு வர முடிந்தால் அதைவிட பேறு ஏது? இணையத்தில் பொங்கி தெறிக்கும் உணர்ச்சிகளை தயவு செய்து ஆக்கபூர்வமாக உபயோகிப்போம் .