தன்வழியறிதலில் தொடங்கி… தானதல் என உணர்வுகளை எழுதி வந்தாலும், பெரிய கனவுகளோ திட்டவட்டமான குறிக்கோள்களோ இல்லமல் இருந்து வந்தன.

கடந்த சில வருடங்கள், கடந்த சில மாதங்கள் அளித்த தெளிவில் எனது வாழ்வை இப்படி தொகுத்துக்கொள்ள விழைகிறேன்..

இங்கே பல முறை பேசியது தான்.. மேலும் பலமுறை அறையின் whiteboard மற்றும் எண்னங்களில் பல்வேரு வடிவில் கண்டவற்றின் இன்றைய வடிவம் என கூறலாம்..

Click to Expand

இதில் ஜெயமோகனை முதலில் பேசி விடுவோம், பலமுறை சொன்னது தான்.. இந்த வாழ்வு ஜெவுடையது.. எனது வாழ்வின் அர்த்தமாகவும் துணையாகவும் இருப்பது அவரும் அவரது படைப்புகளும். அவற்றை சார்ந்து நான் எடுக்க விரும்பும், செய்ய விழையும் முன்னெடுப்புகள் மட்டுமே எனது வாழ்வின் இன்பம்.

The reason I quit corporate and joined the social sector is to create impact. The impact that I create is what drives me. Though its two years since I joined, past few months have been eye opening and provided me a lot of clarity on what I got to do and how I to do it. I have identified my strengths and am working on it. Overall goal is to transition into the role of Programme Evaluation. Learnign Data Analysis and Public Policy will help me in the process. Initially work within Bhumi and slowly grow within the sector.. pausing here..

டிவிட்டரில் 17,000 பாலோவர்ஸ் என இருந்த கல்லூரி காலம் முதல் இன்று வரை, பொது வாழ்வில் இருப்பது எனக்கு உவப்பாக இருக்கிறது, எனது அடிப்படை இயல்பாகவும் இருக்கிறது. இன்று விஷ்ணுபுரம் வட்டத்தில் பங்களிப்பதும் ஒரு வகையில் அந்த இயல்பின் வெளிப்பாடு என்றே தோன்றுகிறது.

ஆனால் பொது வாழ்வில், யாராக இருப்பது? இன்றும் தினசரி வம்புகள் பேசி ஒரு social media influencerஆக ஆவது இயலாத காரியம் அல்ல என்றாலும், அது எனது பாதை அல்ல. “தோன்றின் புகழொடு தோன்றுக” என்பதற்கு ஏற்க ஒரு முக்கியமன, தவிர்க்கையலாத அறிவியக்கவாதியாக வெளிப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். இந்த விருப்பம், தமிழ் அறிவியக்க சூழலில் மட்டும் அல்ல, மேலே உள்ள பூமி சார்ந்த வரிகளிலும் அதை நீங்கள் காணலாம்… பூமியின் இணை நிறுவனர் இன்று இந்தியா முழுதும் அறியப்படும் ஒருவர், சமூக / தொண்டு நிறுவனங்களின் துறையில் முக்கியமானவர். அங்கு நான் கண்ட பலரும் இவ்வாறு தங்கள் நிறுவனங்களுக்கு வெளியேவும் அறியப்பட்ட, மதிக்கப்படும் ஆளுமையாக உள்ளார்கள். அப்படி ஒருவனாக நான் ஆக வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை, விருப்பம், அவா…

இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்? அதற்கு தகுதியுள்ளவனாக நான் எவ்வாறு ஆவது?

  1. பூமி சார்ந்த செயல்களில் productiveஆக இருப்பது… எனது பங்களிப்பையும், அதன் தாக்கத்தையும் அதிக படுத்துவது. மிக குறையாவக இருந்த ஒன்றை, சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறேன்.. எனது முழுவிசையும் வெளிப்பட வேண்டும்.
  2. என்னை தயார்படுத்திக்கொள்தல்.. அதற்கு தேவையான வாசிப்பு… நான் விரும்பும் இடத்தை அடைய மிக மிக விரிவாக வாசிப்பு மிக மிக அவசியம்.
    //அறிவியக்கத்தில் முக்கியமான தரப்பாக முன்னெழ தேவையான பல்துறை வாசிப்பு உள்ளவனாக// என முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளேன், அந்த பல்துறை வாசிப்பை தொடங்கி, தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

இங்கு, அப்படி வாசிக்க ஒரு எனக்கென ஒரு பாடதிட்டத்தை வகுத்துக்கொள்ள தொடங்கினேன்… அப்பொழுது தான் ஒன்று புரிந்தது.. இந்திய ஆட்சி பணி தேர்விர்க்கான பாடதிட்டமும், நான் விரும்பும் பாடதிட்டமும் கிட்டதட்ட ஒன்றே என…

அவ்வறென்றால், அந்த பாடதிட்டத்தை வாசிக்க தான் போகிறேன் என்றால், ஏன் நான் அந்த தேர்வை எழுத கூடாது?? அப்படி எழுதினால்… பொது ஆளுமை ஆவது… சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது என அனைத்துமே இணைந்து ஒன்றாக கிடைக்குமே…

இந்த ஞானோதயம் 30 வயதிலா வர வேண்டும்? ஆனால், 8வது படிக்கும் பொழுதே இஆப ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது… அப்பொழுது அது விளக்கு ஒளிரும் வாகனங்களுக்காகவும், சிவப்பு கம்பள வரவேற்ப்புகளுக்காகவும் இருந்தது.. அதிலிருந்து இன்று impact on the society… esp as policy maker / policy implementer… அதை அங்கிருந்து புரிந்துக்கொள்ள வாய்ப்பாகிருக்கும் என தேன்றுகிறது..

எனது intelectual ability மீதான ஒரு சவாலாகவும் இது இருக்கும்… மிக குறிப்பான இந்த இலக்கும், அது கோரும் அர்பணிப்பும் will defenetly help improve my personal effectiveness.

2022 தேர்வுக்கு 200 நாட்கள் மட்டுமே உள்ளன… இதில் தேர்ச்சி பெறுவது கிட்டதட்ட இயலாத விஷயம்.. 2023 தேர்வு வயது உச்சவரம்பை கடப்பதற்கு முன் எனது கடைசி முயற்சியாக இருக்கும்.

I just want to give my best and see what comes out!