பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரணதண்டனையை ஆயுள் கைதாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நன்னாளில், அற்புதம்மாள், “என் மகனுக்குத் தூக்கு குறைக்கப்பட்டாலும், மற்ற அப்பாவிகளுக்காக என் போராட்டம் தொடரும்” என கூறி உள்ளார்.
ஒரு சிறு உந்துதலில் இந்திய அமைப்பில் தூக்கு தண்டனை பற்றி கொஞ்சம் ஆராய தொடங்கினேன்!
இந்திய தண்டனைச் சட்டம் 8 இடங்களில் மரண தண்டனையை பற்றி குறிப்பிடுகிறது.
1) Section 120B – Punishment of criminal conspiracy
Whoever is a party to a criminal conspiracy to commit an offence punishable with death, 2*[imprisonment for life] or rigorous imprisonment for a term of two years or upwards, shall….be punished in the same manner as if he had abetted such offence.
குற்றவியல் சதித்திட்டம் – சதித்திட்டம் புரிபவர்களுக்கு அந்த சதிச்செயல் நடைப்பெற்றால் என்ன தண்டனையோ அதே தண்டனை வழங்கப்படும். (மரணதண்டனை உட்பட)
2) Section 121 –
Waging, or attempting to wage war, or abetting waging of war, against the Government of India.–Whoever wages war against the 3*[Government of India], or attempts to wage such war, or abets the waging of such war, shall be punished with death, or 4*[imprisonment for life] 5*[and shall also be liable to fine].
இந்திய அரசின் மீது போர் தொடுத்தால்…
3) Section 132 – Abetment of mutiny, if mutiny is committed in consequence thereof.
Abetment of mutiny, if mutiny is committed in consequence thereof.–Whoever abets the committing of mutiny by an officer, soldier, 1*[sailor or airman], in the Army, 2*[Navy or Air Force] of the 3*[Government of India], shall, if mutiny be committed in consequence of that abetment, be punished with death or with 4*[imprisonment for life], or imprisonment of either description for a term which may extend to ten years, and shall also be liable to fine.
கலகத்தை தூண்டிவிட்டால். (கலகம் நடைபெறும் பட்சத்தில்)…
4) Section 194 – Giving or fabricating false evidence with intent to procure conviction of capital offence
…if an innocent person be convicted and executed in consequence of such false evidence, the person who gives such false evidence shall be punished either with death or the punishment hereinbefore described
ஒரு நிரபராதி மீது பொய்யாக வழக்கு/சாட்சிகளை ஜோடித்து அதன் மூலம் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டால், ஜோடித்தவர்கும் மரணதண்டனை வழங்கப்படலாம்.
5) Section 302 – Punishment for murder
Punishment for murder.–Whoever commits murder shall be punished with death, or 1*[imprisonment for life], and shall also be liable to fine.
Section 303 – Punishment for murder by life-convict
Whoever, being under sentence of 1*[imprisonment for life], commits murder, shall be punished with death.
கொலை செய்தால்…
6) Section 302 – Abetment of suicide of child or insane person
If any person under eighteen years of age, any insane person, any delirious person, any idiot, or any person in a state of intoxication commits suicide, whoever abets the commission of such suicide, shall be punished with death or 1*[imprisonment for life], or imprisonment for a term not exceeding ten years, and shall also be liable to fine.
18 வயதுக்கு உட்பட்டவரை அல்லது மனநிலை பாதிக்கப்பட்டவரை தற்கொலைக்கு தூண்டினால்
7) Section 364 A – Kidnapping for ransom, etc.
Whoever kidnaps or abducts any person or keeps a person in detention after such kidnapping or abduction, and threatens to cause death or hurt to such person, or by his conduct gives rise to a reasonable apprehension that such person may be put to death or hurt, or causes hurt or death to such person in order to compel the Government or any foreign State or international inter-governmental organisation or any other person to do or abstain from doing any act or to pay a ransom, shall be punishable with death or imprisonment for life, and shall also be liable to fine.
பணதிற்காக எவரையாவது கடத்தினால்
8) Section 396 – Dacoityதிட்டுதல் with murder
If any one of five or more persons, who are conjointly committing dacoity, commits murder in so committing dacoity, every one of those persons shall be punished with death, or 1*[imprisonment for life], or rigorous imprisonment for a term which may extend to ten years, and shall also be liable to fine.
வழிபறி மற்றும் கொலை செய்தால்…
இந்த 8 மட்டும் அல்லாது சமீப தில்லி கற்பழிப்பு சம்பவதிற்கு பின் The Criminal Law (Amendment) Act, 2013ன் கீழ் கற்பழிப்பு மூலம் மரணம் அல்லது நிரந்தர பாதிப்பு ஏற்பட்டால் மரண தண்டனை வழங்கலாம்.
இங்கு கவனிக்கப்பட வேண்டியது இந்த சட்டம் 1860ம் ஆண்டு அமுல் படுத்தப்பட்டது. இதில் குறிப்பிட்டுள்ள பல விஷயங்கள் சுதந்திரத்துக்கு முன்பானவை. சுதந்திரத்துக்கு பின் அரசு இந்த சட்டங்களை திருத்த எந்த முன்னெடுப்பும் எடுக்க வில்லை என்பது கவலைக்குறிய விஷயம்.
சதி திட்டம் தீட்டுதல் மரண தண்டனை அளிக்கபட வேண்டிய குற்றமா?? ஆங்கிலேய அரசின் ஆட்சியில் அரசுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அடிப்படையில் மரண தண்டனை அளிக்க/சிறை அனுப்ப இது உதவி இருக்கலாம். இன்றும் இந்த சட்டம் நீடிக்க வேண்டுமா?
ஒரு கலகத்திற்கு காரணமாக இருந்தால் மரண தண்டனை என்பதும் அவசியமா?
ஆள் கடத்துதல் குற்றம் எனினும் மரண தண்டனை?
சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதால் மட்டுமே நீதித்துறை மரண தண்டனை அளித்து விடுவதில்லை எனினும் அரசியல் சாசனத்தில் மரண தண்டனை என ஒன்று இருப்பது அடிப்படை மனித உரிமைக்கு புறம்பானது என்பது பலரின் கருத்து. ஐக்கிய நாடுகளின் குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ள இந்தியா மரணதண்டனையை ஒழிக்க அறைகூவும் அதன் இரண்டாம் நெறிமுறையில் கையெழுத்திட மறுத்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்துள்ள பல தீர்மானங்களில் மரணதண்டனை ஒழிப்பிற்கு எதிராக வாக்களித்து உள்ளது. (1,2) காந்திய கோட்பாடுகளை கடைப்பிடிப்பதாக கூறும் இந்தியா மரண தண்டனையை ஒழிக்க முன்வராதது கவலை அளிப்பதாகவும் இந்திய அரசியல் சாசனதிற்கு அடிப்படையான ஐக்கிய ராஜியத்தில் மரண தண்டனை ஒழிக்கபட்டுள்ளது நமக்கு முன்மாதியாகவும் இருக்க வேண்டும் எனவும் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் மரண தண்டனைக்கு எதிராக பல தீர்ப்புகள் வழங்கிய நீதியரசர். கிருஷண ஐய்யர் குறிப்பிட்டுள்ளார்.
அமைப்பு சார்ந்த பார்வை தவிர்த்து நடைமுறையில் மரண தண்டனை பற்றி பார்ப்போம்:
அனைத்து மரண தண்டனை குறித்த வழக்குகளும் உச்ச நீதிமன்றதில் மேல்முறையீடு செய்யலாம்.
உச்ச நீதிமன்றம் 1980 மற்றும் 1983ல் இரண்டு முக்கியமான தீர்ப்புகளில் சட்டதில் மரண தண்டனைக்கு வாய்ப்பிருந்தாலும் சில சிறப்பு காரணங்கள் இருந்தால் மட்டுமே மரண தண்டனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. //rarest of rare cases//எனும் வீதி நீதிபதின் சொந்த முடிவுக்கு விடப்பட்டுள்ள நிலையில் இந்த செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. 14 முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மரண தண்டனை அளிக்கப்பட்ட 13 குற்றவாளிகளின் வழக்கில் தவறான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவர்களின் கருணை மனுவை எற்குமாறும் கடந்த ஆண்டு குடியரசு தலைவருக்கு மனு அளித்து உள்ளனர்.
இது ஒரு பக்கம். நீதிமன்ற தீர்ப்பு வெளியானதும் குற்றவாளி ஆளுநர் அல்லது குடியரசு தலைவரிடம் கருணை மனு அளிக்கலாம். உச்ச நீதிமன்றம் பல இடங்களில் நீதிமன்றம் சட்ட ரீதியான முடிவுகளை மட்டுமே எடுக்க இயலும். கருணை அடிப்படையிலான முடிவுகளை அரசு தான் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது மட்டுமல்லாது
‘Legal justice belongs to the Court but compassionate commutation belongs to the top executive… So we, dismiss this petition, leaving the prisoner to move the President for any interim orders, if he is so advised.’
பல நேரங்களில் இவரின் கருணை மனு ஏற்க்கப்படலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளது. இதன் மூலம் நீதித்துறையின் அதிகாரமும் சில வரம்புக்கு உட்பட்டதென்றும், நீதியரசர் தவறு என நினைத்தாலும் மரண தண்டனை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் எனவும் அறிய முடிகிறது.
கருணை மனு பெயரளவில் குடியரசு தலைவரிடம் என்றாலும் Schedule 2, Allocation of Business Rules. 1961ன்படி கருணை மணு அனைத்தும் உள்துறை அமைச்சகத்தின் உள்விவகார துறையை சென்று சேரும். அவர்களின் முடிவின்படி மட்டுமே குடியரசு தலைவர் செயல்பட வேண்டுமென்பது சட்டம். நீதிபதிகளுக்கேனும் //rarest of rare cases// என்ற வீதி உள்ளது. இங்கு முடிவெடுப்பதற்கு எந்த சட்ட வழிமுறைகளும் இல்லை. எந்த காலக்கெடுவும் இல்லாமல் எந்த சட்ட நெறிமுறைகளும் இல்லாமல் உள்துறை அமைச்சரின் விருப்பத்தின் பேரில் கருணை மணு மீதான முடிவுகள் எடுக்கப்படுகின்றான. கருணை மணு பற்றிய தகவல்கள் எதையும் வெளிக்கூற வேண்டிய கட்டாயமும் அரசுக்கு இல்லை. (பேரறிவாளனின் தகவல் அறியும் மணு நிராகரிக்க பட்டது நினைவிருக்கலாம்). அத்வானி, சிவராஜ் பாட்டீல் ஆகியோரால் நிராகரிக்கபட்ட பல மனுக்கள் சிதம்பரம் உள்துறை அமைச்சரானதும் ஏற்க்கப்பட்டன என்கின்றன நாளிதழ்கள். அரசின் ஜனரஞ்சக populist நடவடிக்கைகளால் அடிப்படை உரிமைகள் கூட நிறைவேற்றாமல் அஃப்சல் குரு தூக்கிடப்பத்தது அனைவரும் அறிந்ததே. அரசு வழக்கு சார்ந்த விஷய்ங்களை தீர ஆய்வு செய்து முடிவு செய்யுமாஅல்லது மக்களின் பொதுவான கருத்துக்கு செவிசாய்க்குமா என்பதை உங்கள் உகத்திற்கே விட்டு விடுகிறேன்!
தவறுகள் சாதியப்படுகிற நீதித்துறை, வரையறுக்கபடாத // rarest of rare cases// என்ற நெறி மற்றும் எந்த சட்டதிற்கும் உட்படாத உள்துறை அமைச்சகதிதின் கையில் ஒரு தனி மனிதனின், சுதந்திர நாட்டின் குடிமகனின் உயிரை பறிக்கும் உரிமை சரியா??
யோசியுங்கள் நட்புகளே!!