கடவுள் துகள் அல்லது ஹிக்ஸ் பாசன் துகள் கண்டுபிடிக்கபட்டுள்ளது இன்று…. அப்படினா என்ன?? என்ன கண்டு பிடிச்சிருக்காங்க.. எனக்கு தெரிஞ்ச கொஞ்சம் அறிவ உங்களுக்கு புரியும்படி தமிழ சொல்ல முயல்கிறேன்.. தவறுகள் இருக்கும் பொருத்தருள்க!
அடிபடையில் பொருள் என்றால் என்ன?? எதனால் ஆனது?? அல்லது உயிர்?? உயிர் எதனால் ஆனது?? அனைத்துக்கும் ஆதாரம் அணுகூழுமம் (molecule).. அவை அணுக்களால் ஆனது! அணு?? பிரித்தால் அணுகருக்கு வெளியே எலக்ட்ரான்..உள்ளே நியூட்ரான்/ப்ரொட்டான்.. அவை??? அது சரி இந்த எலக்ட்ரான் தான அடிபடை பொருள்னா அதற்கு எடை எப்படி வந்தது?? இந்த கேள்வி பலகாலமாக விஞ்ஞானிகளின் மனதில்…
எலக்ட்ரான் என்பது எடை அற்றது (அவை அணுக்களாகும் பொழுது எடை பெறுகின்றன) என சில காலம் கருத பட்டாலும் பலரால் ஏற்றுகொள்ள படவில்லை. எடையை விவரிக்க பல கூற்றுகள் தொடர்ந்து வெளிவந்தாலும் இப்பொழுது பரவலாக ஏற்றுகொள்ளபட்டது standard model. இதன்படி பிரபஞ்சம் முழுவது ஹிக்ஸ் புலம் Higgs field என ஒரு புலம் (சக்தி எனவும் கொள்ளலாம்) பரவி உள்ளது!! (அண்டவெளியின் வெற்றிடத்திலும்) இந்த புலத்தில் நிறம்பி உள்ள ஹிக்ஸ் பாசன் Higgs boson துகள்களினிடையேயான வினையால் எடை உண்டாகுகிறது என்பது இந்த கூற்றை உருவாக்கியவர்களின் ( Steven Weinberg and Abdus Salam) எண்ணம். எடை அளிப்பதால் இதை கடவுள் துகள் என அழைக்கிறார்கள். இந்த கூற்று இதுவரை நடைமுறையில் நிருபிக்கபடாமல் இருந்தது. இன்று கடவுள் துகளின் கண்டுபிடிப்பால் இந்த கூற்று நிருபிக்க பட்டுள்ளது.
அவ்வளவுதானான்னு தோணும்… ஆனால் பல நூற்றாண்டுகளாய் இருந்துவந்த கேள்விக்கு பதில் இது!
கவனிக்க: இது எடை எப்படி வந்தது என கூறுகிறதே தவிற எடையின் இயல்பை பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.
புலம் என்று கூறிவிட்டு அதனுள் துகள் எப்படி வந்தது என கேள்வி எழுந்தால் மேற்கொண்டு படிக்கவும்! கொஞ்சம் அறிவியல் கலந்திருக்கும்.. குழப்பலாம்…(proceed at your own risk!)
முதலில் அறிவியல் புலம் (field) என்பதை எப்படி அணுகுகிறது என பார்ப்போம்.
ஒளி..அனைவரும் அறிந்தது! வெறும் ஒரு சக்தி வடிவம்… இயற்பியலின் படி மின் சக்தி மற்றும் காந்த சக்திகளால் ஆனது. ஆதலால் ஒளியை அறிவியல் சொற்களில் ( in tecnical terms: electro magnetic field) மின் காந்த அலை/மின்காந்த புலம் எனவே அழைப்பார்கள். ஒரு திட பொருளுடன் வினை புரிய திட பொருள் அவசியம் என்பது common sense! அப்படி இருக்கையில்
1) இந்த மின்காந்த அலை உலோக பொருட்களுடன் வினை புரிந்து அதனுள் இருந்து எலக்ட்ரான் போன்றவற்றை வெளியேற்றியது விஞ்ஞானிகளை குழப்பியது.
2) இந்த மின்காந்த புலத்தின் சக்தியை அளக்கையில் அது குறிபிட்ட அளவுகளிள் மட்டுமே இருந்தது!
(அதாவது 1, 1.5,2,2.5 என இருந்தது என கொள்ளுங்கள். இடையே உள்ள 1.1,1.2,1.3,1.4 போன்ற அளவுகள் கிடைக்கவில்லை!
சின்ன எ.கா: நான் உங்க கிட்ட கொஞ்சம் காசு கடன் கேக்றேன்.. நீங்க எனக்கு எவளோ வேனா தரலாம்.. ஆனா நடைமுறையில் 25 பைசா தரலாம்..இல்லனா 50 பைசா தரலாம்.. 34,33, 27, 46 போன்ற அளாவுகளில் காசு தர முடியாது)
அதுபோல கோட்பாடின் படி அனைத்து சக்தி அளவுகளும் சாத்திய பட்டாலும் நடைமுறையில் சில அளவுகளே சாத்திய பட்டன.. அதனால் சக்தி என்பது சிறு அளவுகளாக (quantum) பிரிக்க பட்டுளன என முடிவு செய்தார்கள்.. இந்த அளவினால் பொருட்களுடன் வினை செய்ய முடியும்! அதற்கு போட்டான் (photon) என பெயரிட்டனர்!
ஆதலால் ஒரு புலம் மற்ற பொருட்களுடனோ அல்லது அதன் இடையோ வினை புரிய அதனுள் துகள் இருப்பதாய் அணுமானித்தனர்!
விஞ்ஞான ஆராய்ச்சியிம் மூலம் போட்டான் உள்ளது என நிருபிக்க பட்டுள்ளது! இன்றைய பௌதியல், முக்கியமாக particle physics நிருபிக்க படவில்லை என்றாலும் standard modelஐ ஏற்றுகொண்டு பல ஆராய்சிகளாய் செய்துவருகிறது! இந்த நிலையில் ஹிக்ஸ் பாசன் துகளின் கண்டுபிடிப்பு.,,சரியாக சொல்ல வேண்டுமானால் ஹிக்ஸ் பாசன் துகள் உள்ளதென நிருபிக்க பட்டது விஞ்ஞானத்தில் ஒரு பெரிய மைல்கல்.
இதம் மூலம் பிரபஞ்சம் உண்டான படைக்க பட்ட அந்த கணத்தை மறுபடியும் recreate செய்ய முடியும் என்பது விஞ்ஞானிகள் வாதம்
இதைவிக முக்கியமாக பௌதிகத்தின் ultimate goal ஆன அனைத்து விஷயங்களையும் செயல்களையும் கட்டுபடுத்தும் அடிப்படை விதியை நோக்கிய தேடலில் மிக முக்கியமான படி!
இப்பொழுது பௌதிகத்தில் 4 அடிபடி விதிகள் உள்ளன
1) புவியீர்ப்பு விசை
2)மின்காந்த விசை
3) அணு கருவுக்குள்ளுள்ள விசை
4) அணுகருவுக்கு வெளியே உள்ள ஈர்ப்புவிசை
ஆகியவற்றை கட்டுபடுத்து/விவரிக்கும் விதிகள்.
இவற்றில் கடைசி இரண்டையும் ஒருமை படுத்திவிட்டனர்!
மீதம் இரண்டையும் ஒருமைபடுத்தி unified law பிரபஞ்சத்தின் அனைத்து இயக்கத்தையும் கட்டுபடுத்தும் ஒரு ஒரே ஒரு அடிப்படை விதியை அமைக்கும் முயற்ச்சியில் இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவும்!