“நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இதே வழியில் பெண்கள் மீதான வன்முறைகளை நோக்குவோமேனால்…
கற்ப்பழிப்பு.. கற்பழிக்கும் எண்ணம் நோய் அல்ல… என்னை பொறுத்தவரை அது ஒரு நோயின் விளைவே.
கொஞ்சம் ஆழமாகவே யோசிப்போம். கற்ப்பழிப்பு, பெண்ணின் மீதான பாலியல் வன்முறை அனைத்துமே பெண்ணை சக உயிராக மதிக்க இயலாத நிலையின் வெளிபாடே. இந்த நிலை ஏன் ஏற்படுகிறது??? காமம் மிக சில சந்தர்பங்களிலே காரணமாக இருக்கிறது. 3 வயது மலரை கசக்கும் மிருகங்களும் உள்ளனர், ஏற்கிறேன், ஆனால் அதை தாண்டி பெண்ணின் மீதான தனது கட்டுபாட்டை காட்ட, தன் சொல்லுக்கு கீழ்படியாத பெண்னை தண்டிக்க, அவளை காயபடுத்த என ஆணின் ஆதிகத்தை நிலைநாட்டி பெண்ணை கட்டுபடுத்தவே பாலியல் வன்முறை கையாளபடுகிறது.
பால் உணர்வுகள், ஆடைகள் என்பவற்றை பற்றி நிறையவே பேசபட்டுவிட்டது. அதை தாண்டியும் யோசிப்போம். சில சந்தர்பங்களை பாருங்களேன். அலுவலகத்தில் உயர்பதவியில் இருக்கும் எந்த பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கபடாமல் இருக்கிறது?? பெண்ணின் சாதாரன பேச்சு பள்ளி தொட்டு சமுக ஊடகம் வரை எங்கும் “வழியிறா மச்சி” என்றுதானே மொழி பெயற்க படுகிறது?? ஆண் தவறு செய்தால் அது தவறில்லை என்றுதானே சமுகம் கற்பித்து வருக்கிறது?? பாலியல் தாக்குதலுக்கு ஆளாகபட்ட பெண் காதில் படும் விதமாகவே, “இவ இது பண்ணாமலா அவன் வந்துருப்பான்” என்ற ஏசுகள் தொடரதானே செய்கிறது?? சீதையின் கற்பையே சந்தேகபட்ட நாடுதானே இது??
ஏதோ வகையில் மற்ற குற்றங்களை போல் அல்லாமல் பாலியல் தாக்குதலில் தண்டனை பெண்ணுக்கு மட்டுமே என்றே சமுகம் நிலைபட்டு இருக்கிறது. பெண்னை சீரழித்துவிட்டு வெளியே சொல்லி விடுவேன் என ஆண் பெண்னை மிரட்டும் அவலம் நம் சமுகத்தில் மட்டுமே சாத்தியம் இதன் இன்னொரு பின்விளைவாக பெண் மீதான பல வன்முறைகள் வெளிதெரியாமலும் போகின்றன..
அடுத்து,
தன் காதலை ஏற்றுகொள்ளாத பெண் மீது அமிலம் வீசுவதற்கும், அவளை வன்புணர்வதற்கும் வித்தியாசம் சந்தர்பமும், மன தைரியமும் மட்டுமே… அடிபடை ஊந்துதல் ஒன்றே. தனக்கு கீழ் படியாத கட்டுபடாத பெண்னை பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்குவது என்பது பரவலான மன நிலையாக உள்ளது. எடுத்துகாட்டுக்கு வெகு தூரம் செல்ல தேவையில்லை, கழிவறைகளிலும் பேருந்துகளிலும் அழைக்க சொல்லி எழுதபடுவது தன்னை மதிக்காத பெண்ணின் எண்கள் தானே? ஏன் பள்ளி ஆசிரியர்களே பாலியல் தாக்குதலுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவே உட்படுத்தபடுவது இன்றைய சமுகத்தின் நிதர்சனம்.
இவற்றுக்கு தீர்வு என்ன???
ஆண் மனதில் பெண்னை பற்றிய பிம்பம் உருவாகுவது தாயிடம். பெண்னை எப்படி நடத்துவது என அவன் அறியவது தந்தையிடம். வீட்டில் தாயை தந்தை சமமாக நடத்தாத பொழுது மகனிடம் பெண்களுக்கு சமத்துவம் நாடுவது சாத்தியமா? சகோதர சகோதரிகளுக்குள் வீட்டில் ஏற்றதாழ்வு இருந்தால், அவன் அந்த சகோதரியையே மதிக்க மாட்டான்..வெளி உலக பெண்களை எப்படி மதிக்க தோண்றும் அவனுக்கு? கணவன் மனைவியை அடிப்பது தவறு என்ற பிரக்ஞை கூட இல்லாமல் எத்தனை குடும்பங்கள் இன்றும்? இத்தகைய சூழலில் பெண்களுக்கு எதிரான வன்முறை அவனுக்கு எப்படி தவறாக தெரியும்? பெண் மரியாதையாக நடத்தபட்டு, அவளது உணர்வுகள் மதிக்கபடும் சூழ்நிலையில் வளரும் ஆண் பெண்களுக்கெதிரான வன்முறையில் ஈடுபடும் சாத்தியம் வெகு குறைவே!
ஆணும் பெண்னும் சமமாய் பழகுவதை சமுகம் தடை செய்கையில்தான் ஆணுக்கு பெண் என்பவள் அடைய வேண்டிய பொருளாக தோண்ற தொடங்குகிறாள். பள்ளியில் தனிதனியாக உட்காரவைப்பதில் தொடங்குவது ஆணும் பெண்ணும் பேச கூடாது, பேசினால் அபராதம் என்று கல்லூரி வரை தொடர்கிறது. பொது இடத்தில் ஆணும் பெண்னும் பேசுவதை திரும்பி பார்க்காமல் கடப்பவர்கள் எத்தனை பேர்? இப்படி ஒதுக்கி வைப்பதால்தான் பெண்னுடன் சகஜமாக பழகி அவளின் உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாமல் போகிறது ஆண்களால். பெண் தோழிகள் உள்ள ஆண்கள் பெண்களை லாகுவாக புரிந்து கொள்வது மற்றுமல்லாமல் அவர்களில் மீதான வன்முறைகளில் ஈடுபடமாட்டார்கள் என்பது என் துணிபு.
உலகம் முழுதும் பரவலாக இருக்கும் இன்னொரு விஷயம், பெண்கள் மீதான அடக்குமுறை பெருமளவில் நடப்பது போதையில். இது வரை மது போதைக்கு ஆளானதில்லை என்பதால் அதன் கூறுகள் பற்றி விவாதிக்கும் உரிமை இருப்பதாய் எண்ணவில்லை. ஆனால் தற்போதைய தமிழக சூழலில் மது மலிந்து ஒரு தலைமுறையை டாஸ்மாக்கால் சீரழித்து வருவது வேதனை அளிப்பதாக இருக்கிறது. ஆம்புலன்ஸ் டிரைவராக பணிபுரியும் ஒருவர், டாஸ்மாக் விடுமுறை தினங்களில் விபத்து குறித்த அழைப்புகள் பன்மடங்கு குறைவதாக கூறியதாக நண்பர் பகிர்ந்த பொழுது அதீத வியப்பு ஏற்படவில்லை. மறுநாள் காலை வருத்தபட வைக்கும் இரவு போதையில் அணுப்பிய குறுஞ்செய்திகள், செய்த அழைப்புகள், பேசிய வார்த்தைகள் வரிசையில்…… வீட்டில் மனைவியிடமும் சமயங்களில் மகளிடமும் தகாது நடந்து கொள்வதும் சேர்வது நம் நாட்டிலும் பரவுவது வேதனை
இதை ஒரு செய்தியாகதான் பகிர்கிறேன். காரணம் போதையின் தாக்கத்தில் சிந்திக்கும் திறன் குறையலாம், சுய கட்டுபாடை இழக்கலாம் ஆனால் அதனால் வெளிபடுவது ஆழ்மனதில் ஏற்கனவே பதிந்த எண்ணங்கள் தானே?? ஒரு பெண்னை பலாத்காரம் செய்ய தைரியம் தருவது போதையாக இருக்கலாம் ஆனால் செய்ய தூண்டுவது போதை என்பதை ஒருகாலும் ஏற்க இயலாது என்னால்.
அடுத்து ஆணின் பால் உணர்வு அதிகமாக இருப்பதாலும் அதற்கான வடிகால் கிடைக்காத்தாலும்தான் இது போன்ற செயல்கள் அதிகமாகின்றன, விபசாரத்தை சட்டபூர்வமாக அணுமதித்தால் இது போன்ற நிகழ்வுகள் குறையும், அரசு இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஒரு வாதம். விபசாரத்தை சட்டபூர்வமாக்குவதை நான் ஆதரித்தாலும் இதை காரணமாக சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆண் பெண் என்ற பாகுபாடு இலலாதது பால் உணர்வு. அப்படியே இருந்தாலும், சட்டபூர்வமாக தவறு என்றாலும் சர்வசாதரனமாக நடக்கும் விபசாரத்தை நாட தைரியமில்லாதவன் அடக்கபடும் பால் உணர்வால் பெண்னை வண்புணர முயற்சிப்பான் என்பது ஏற்புடையதா?
எனது புரிதலின் படி என் அவதானிப்பு இதுதான், “பெண்களின் மீதான வன்முறைகளில் ஆண் ஈடுபட முக்கிய காரணம், அவன் வளரும் சுழலும் அது பெண் குறித்து அவனுள் ஏற்படுத்தும் பிம்பமும்தான்.” பெண்மீதான அனைத்து வன்முறையும், தாக்குதலும், பாலியல் பலாத்காரமும் வன்புணர்வும் (harassment, domestic violence and sexual abuse..) இதன் வெளிபாடே, தர்க ரீதியில் என்னை பொருத்தவரை பெண்ணை அணுமதியில்லாமல் விழியால் புணர்பவனுக்கும், உடலால் புணர்பவனுக்கும் வித்தியாசம் ஏதுமில்லை.
இதை சரி செய்ய நாட்டின் சட்டங்களையோ, அதை சரியாக நடைமுறைபடுத்த காவல் துறையையோ மாற்ற என்னால் இயலபோவதில்லை. வழக்கு பதிவு செய்யவும் தயங்கும் காவலர்களை கட்டுவிக்கும் உழலை ஒழிக்க எந்த மந்திர கோளும் என்னிடம் இல்லை. கலாசார காவலனாக மாறி ஒட்டு மொத்த ஆண் வர்கதிற்கும் பாடம் நடத்தவும் என்னால் ஆகாது. என்னால் இயன்றதெல்லாம், நாளை என் மகனுக்கு பெண்களை மதிக்க கற்று கொடுக்கவும், அவளின் உணர்வுகளை மதிக்க செய்து, அவளின் மதிப்பை உணர செய்வதே. உங்களாலும் இயலும் தானே இது??
பெண்களுக்கு: பாலியல் அல்லாத அடக்குமுறைகளையும், உங்கள் மீதான வன்முறைகளையும் எதிர்த்து குரல் கொடுக்க தொடங்குங்கள், பாலியல் வன்முறை என்பது அதன் நீட்சி மட்டுமே. ஒவ்வொருவரும் தனிதனியாக குரல் கொடுக்க தொடங்கினால்தான் ஒருநாள் அது கோஷமாக உருமாறும்!
October 4, 2018 at 10:44 am
hats off!!
March 14, 2019 at 10:20 pm
Well written. Awesome article 🙂