சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து.
ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா??
கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு இரண்டு நிமிட செய்தி. போலிஸ்..விசாரனை..கைது.. நீதிமன்றம்..தண்டனை. இதை தாண்டி அதை பற்றி பேசினால் சானல் மாற்றி விடுவோம். ஆனால் இந்த செய்தி அப்படி அல்ல, அந்த பெண் வண்புணரபட்டு தாக்கபட்டு உயிருக்கு போராடிகொண்டிருக்கிறாள். அவள் குணமாகி இல்லம் திரும்பும் வரும்வரை அவளையே காட்டிகொண்டிருந்தாலும் டி.ஆர்.பி பற்றி கவலையில்லை ஊடகங்களுக்கு. இது பிரச்சனையில்லை. ஆனால் மற்ற சானல்களுடனான போட்டியில் ஊடகங்கள் உருவாக்கும் மாயையும் மக்கள் மனதில் திணிக்கும் விஷயங்களும் வேதனை அளிக்கின்றன.
ஒரு நியாயமான ஊடகமாக இருந்தால் இந்த விஷயத்தில் மக்களின் எழுச்சியை இது போன்ற அனைத்து வழக்கிலும் நடவடிக்கை எடுக்க அரசை நிர்பந்திப்பதில்தானே திருப்பி இருக்க வேண்டும்?? அதை தவிர்த்து இந்த வழக்கில் தண்டனையை அவசரபடுத்துவது பாதிக்க பட்டவளுக்கு நியாயம் கிடைப்பதைவிட ஊடகம் மக்களின் கோவதிற்கு வடிகாலாக இருக்க விரும்புவதைதானே காட்டுகிறது?? As some one said they demand instant revenge rather than long-lasting justice.
குற்றம்சாட்டபட்ட அனைவரும் கைது செய்யபட்டு, பாதிக்கபட்டவளின் வாக்குமூலம் மேஜிஸ்ட்ரேடின் முன்பு பதியபட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறையைக்காக ஐந்து தனி விரைவு நீதிமன்றம் அமைக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தபின்பும் “அவளுக்கு நீதி கோரி” நடக்கும் போராட்டங்களை ஆதரிக்கும் ஊடங்களிடம்…
நாட்டின் அதிஉயர் பாதுகாப்பு பகுதியில் போராட்டம் வேண்டாம், ராம்லீலா மைதானம் அல்லது ஜந்தர் மந்தர் பகுதிக்கு கலைந்து செல்ல கேட்டுகொண்டு பேருந்தும் ஏற்பாடு செய்த காவலர்களின் வார்த்தைகளை மீறி குடியரசு மாளிகையுள் நுழைய முயற்சித்த போராட்டகாரர்களின் மீது கண்ணீர் புகை குண்டு பிரயோகத்தை மக்கள் மீதான போராட்டமாக சீத்தரிக்கும் ஊடகங்களிடம்…
“என்ன நடந்தாலும் அவளுக்கு நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டேன், அவள் என் சகோதரி” என் கூறிய போராளியிடம், இந்த வருடம் மட்டும் 635கற்ப்பழிப்புகள், அதாவது தினம் இருவர் நாட்டின் தலைநகரில் மட்டுமே கற்ப்பழிக்க பட்டிருகிறார்கள், அதில் ஒருவருக்கு மட்டுமே தண்டனை அளிக்க பட்டுளது என்பதை கொண்டு சேர்க்காத ஊடகங்களிடம்..
எனது கேள்வி இதுதான்:
ஊழலுக்கு எதிரான போராட்டமாகட்டும், இந்த போராட்டமாகட்டும் வீதியில் இறங்கி போராடுபவர்கள் இளைய தலைமுறையை சார்ந்தவர்கள், நாட்டில் ஒரு மாற்றத்தை நாடி காத்திருப்போர். 60 வருடங்கள் முன்பு மக்கள் வீதியில் இறங்கியபொழுது வழிகாட்டி நெறிபடுத்த காந்தி இருந்தார், அவர் வழியில் பல தலைவர்களும். இன்று இவர்களுக்கு தலைவர் எவரும் கிடையாது. ஒருமித்த நோக்கத்தை நோக்கிய அணிதிரளும் இந்த மக்களை வழிநடத்துவது ஊடங்களூம் நீங்கள் தரும் செய்திகள் தான்.
காந்தி அளவுக்கு இல்லை என்றாலும் இவர்களை சரியான வழியில் கொண்டு செல்ல என்ன முயற்சி எடுக்கிறீர்கள்?? உங்கள் மீதிருக்கும் இந்த பொறுப்பை உணர்கிறீர்களா முதலில்???