உலகமும் உடலும் மனமும் திரும்ப திரும்ப எதிர்வைக்கும் எண்ணங்களுக்கு எதிராக என்னை நானே மீண்டும் மீண்டும் வரையறை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஒவ்வொரு வரையறையிலும் மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன்.

நான் செயலூக்கம் கொள்ள, செயல்பட இந்த வரையறை மிகவும் அவசியமாகிறது. மற்றவரிடமிருந்து, என்னிடமிருந்து எழும் கேள்விகளுக்கு பதிலாக இந்த வரையறை அமைய வேண்டும். இப்பொழுது நான் யார்? என்னை எவ்வாறு வரையறை செய்துக்கொள்ளப்போகிறேன்..?

முன்பொரு பதிவில் எனது ஆளுமையை மூன்றாக வகுத்திருந்தேன்… இன்று அது இரண்டாக சுருங்கி உள்ளது.. ஜெயமோகன், விஷ்னுபுரம் இலக்கிய வட்டம் சார்ந்த முகம். இன்னொன்று சமூக வாழ்க்கை சார்ந்தது.

விஷ்ணுபுரம் அமைப்புகளில் நான் இலக்கியவாதி அல்ல, இலக்கிய வாசகன் என்ற அளவிலும் பெரிதாக என்னை முன்வைத்துக்கொள்ள விரும்பவில்லை. ஒருங்கிணைப்பாளராக எனது பங்களிப்பு மற்ற அனைத்தையும் விடவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

பப்ளிக் பாலிசி புலத்தில், அதன் கருத்தியல் தளத்தில் பங்களிக்கவே விரும்புகிறேன்… Raghuram Rajan, Pratap Banu Mehta போல். ஆனால், அந்நிலையை அடைய ஒரு பின்புலம் தேவை. அந்த பின்புலம் கல்வித் துறை சார்ந்து முனைவர் பட்டமாகவோ, ஆய்வறிக்கையாகவோ இருக்கலாம் அல்லது களப்பணி சார்ந்து இருக்கலாம். இரண்டையுமே பரிசீலித்து வருகிறேன்.. கல்வித்துறை எனக்கு ஏற்றதாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.. அதே சமயம், களப்பணி சார்ந்த அமைப்புகளில் பணியாற்றுவதும் உவப்பானதே. அமையும் வாய்ப்புகளை பொருத்து அவற்றை முடிவு செய்யலாம்..

உடனடியாக என் முன் இருப்பது களப்பணி சார்ந்த வாய்ப்புகள் தான். அதை மிக கூர்மையாக Programme monitoring and evaluation சார்ந்து வடிவமைக்க வேண்டும். எனது ஊதியத்தை குறைத்துக்கொண்டு சேர்ந்ததும் தவறோ என தோண்றுகிறது. இதே பங்களிப்பிற்கு சமூக சேவை சார்ந்த நிறுவனங்களில் அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய பணிகளில் சேர முயலவேண்டும்.

அடிப்படையில், மிக உயரிய இடத்தை நோக்கிய எனது பயணத்தில் எனது மதிப்பை நான் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்… என்றுமே அளிக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.. அதற்கான மதிப்பையும் பெற வேண்டும், பெற தவறும் இடங்களில் நீடிக்கக்கூடாது. இதை எங்கோ தவறவிட்டதின் விளைவு தான் இன்று நான் சந்திக்கும் குழப்பங்கள்…

இந்தியாவின் வருங்கால முக்கியமான public policy expert நான் என்பதை எனக்கே தினமும் சொல்லிக்கொள்ள வேண்டும்…

இந்த தன்னுணர்வு, வேலை மட்டுமல்லாது எனது உடல்நிலை, மனநிலை என அனைத்தையும் சாதகமாக பாதிக்கும் என நம்புகிறேன்…