(புதியவர்களுக்கு: டிஸ்கி=டிஸ்கிளேய்மர்=disclaimer)

தேர்ந்த தமிழ் பதிவர்கள் ஒவ்வொரு பதிவுக்கும் தேவைக்கேற்ப டிஸ்கியிடும் பொழுது….பதிவுலகில் அடி எடுத்து வைக்கையில் பொதுவாகவும் சில விஷயங்களை சொல்லிவிட விரும்பியே இந்த பதிவு.
பதிவுலகம் என்றல் என்ன.. ? இங்கிருக்கும்  முறைகள் என்ன வழக்கங்கள் என்ன..? எதுவும் தெரியாமல் தான் அடியெடுத்து வைக்கிறேன்..
7ம் வகுப்பு வரை மட்டுமே தமிழ் படித்ததால் (என் பதிவுகளில் இருக்ககூடிய எழுத்துபிழைகளுக்கு இதை காரணமாக கூறி சுயசமாதானம் செய்து கொள்வதுண்டு) தமிழ் இலக்கணம் குறித்த ஆழ்ந்த அறிவு கிடையாது...எனவே எழுத்துகளில் குறைகள் இருக்ககூடும், படி படியாக அவற்றை நிவர்த்தி செய்து பிழைகளை முழுதும் தவிற்க முயன்று கொண்டு தான் இருக்கிறேன்.
12 வயதில் தமிழகம் நீங்கி…கேரளம் தில்லி என வசித்து வந்ததால் தமிழ் புத்தகங்கள் வாசிக்க கூடிய சந்தர்ப்பம் அதிகம் அமையவில்லை…அதற்கு முன்பே அர்த்தமுள்ள இந்துமதம், பொன்னியின்செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, அலையோசைகளை படித்துமுடித்திருந்தாலும்… அங்கு அதிக பட்ச தமிழ் வாசிப்பு அப்பா வாங்கும் ஆனந்தவிகடன் மட்டுமே.
18 வயதில் கல்லுரி சேர சென்னை மீள்கையில் வாசிப்பு என்பது முழுதும் ஆங்கில நவல்கள்/நூல்கள் என வரையறுக்கபட்டு போனது. ஆனாலும் தமிழ் மீதான காதல் தமிழ்பால் இழுக்க கல்லூரி நூலகத்தில் கிடைத்த சில புத்தகங்களை படிக்க ஆரமித்தேன் (ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம், கங்கை எங்கே போகிறாள்  வாலி வைரமுத்து கவிதைகள், சுஜாதாவின் சில சிறுகதைகள்.) இந்த வருட தொடகத்தில் சந்தில் நுழைந்தபின்தான் தமிழ் இலக்கியத்தின் விஸ்தாரம் புரிய ஆரமித்தது.. (நான் அதிகபட்சம் படித்த சுஜாதாவும்,ஜெயகாந்தனும் இயக்கியவாதிகள் பட்டியலிலேயே சேர மாட்டார்கள் எனவும் ஒரு கருத்து நிலவுவது…எனக்கு தெரிந்தது எவ்வளவு குறைவு எனபதையையே சுட்டி காட்டியது.) 
ஆகவே, இலக்கிய தரம் ததும்பும், அதீதசொல்லாடல்கள் நிறைந்த பதிவுகளை எதிர்பார்க்காதீர்கள். உங்களில் ஒருவனாக..நாம் தினம் சந்திக்கும் வாழ்ககையை எனது பார்வையில் பார்க்க வைக்க மட்டுமே முயல்வேன்.
வாழ்கையில் நான் கற்றதை உங்களுடன் பகிரும்முன் இதை கூறிவிடுவது எனது கடமை என தேண்றியது. என்னைபோல் உங்களில் பலரும் ஆர்வமிருந்தாலும் ஒரு குறுகிய வட்டத்துள் அடைபட்டிருக்கலாம், வாருங்கள் எனது தமிழ் இலக்கிய தேடலில் ஒன்றாய் பயணிப்போம்!