நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாசித்தது எதுவும் நினைவில் தங்காது. வாசித்ததை ஒட்டி நீங்கள் சிந்தித்தது மட்டுமே உங்கள் நினைவில் தங்கும்

வாசிப்பை நிலைநிறுத்தல்…; ஜெயமோகன்

நிறைய வாசித்தல், வாசித்ததை நினைவில் நிறுத்தல் குறித்த ஒரு உரையாடலில், ஜெ வாசித்ததை குறித்து சிந்தித்தலை மீண்டும் வலியுறுத்தினார். தொடர்ந்து “சிந்திப்பது எப்படி?” எனவும் கூறினார். அவர் கூறியதில், என் நினைவில் நின்றவை கீழே.

நாம் அனைவரும், சும்மா யோசிப்பதை சிந்தித்தல் என எண்ணிக்கொண்டிருக்கிறோம். ஆனால், Random thoughts எனப்படும் ஒழுங்கற்ற எண்ணங்களின் கலவை, சிந்தித்தல் ஆகாது. அது வெறும் musing, not thinking.

நாம் பிரக்ஞை பூர்வமாக, முடிவெடுத்து சிந்திக்க வேண்டும். Thinking is a controlled stream of thoughts. எப்படி சிந்திப்பது? இதற்கு நாம் வாசித்ததை, அல்லது ஒரு தலைப்பு குறித்த நம் அறிதலை எப்படி தொகுத்துக்கொள்வது என்ற பார்வையில், மூன்று வழிமுறைகளை ஜெ கூறினார்.

  1. Mental Drama: ஒரு அதீதமான சூழலை உருவகித்துக்கொள்ளுதல். வேறு யாரும் இல்லாத பேருந்து பயணத்தில், உங்கள் அருகே ஒரு அழகான பெண் அமர்ந்து, உங்களிடம் எனக்கு கற்பனாவாதம் குறித்து விளக்க முடியுமா என கேட்டு, அவருக்கு நீங்கள் ஒரு 30 நிமிடம், கோத்தே, வர்ட்ஸ்வர்த், கீட்ஸ், பைரன், ஷெல்லியில் தொடங்கிபிரெஞ்சுப் புரட்சி வரை விவரிப்பது போல் கற்பனை செய்துக்கொள்வது. அந்த கற்பனையில், நீங்கள் அறிந்த தகவல் அனைத்தும் ஒரு சிந்தனை சரடாக உருமாறியிருக்கும். ஒருவருக்கு காதல் என்றால், இன்னொருவருக்கு… ஒருவர் உங்களிடம், “கார்ல் மார்கஸ் பத்தி என்ன தெரியும் உனக்கு?” என கேட்க, அவர் நாண, நீங்கள்பொதுவுடமை அறிக்கை, மூலதனத்தில் தொடங்கி ரஷ்ய புரட்சி வழியாக மார்க்ஸிய பொருளாதாரம், மார்க்ஸியசமூகவியல் கோட்பாடுகள் என ஒரு பெரும் சொற்பொழிவாற்றுவதாக கற்பனை செய்துக்கொள்வது.
  2. Mind Maps: இது பரவலாக அனைவரும் அறிந்தது. அட்டவணையாக தகவல்களை தொகுத்துக்கொள்ளுதல். எகா: இந்திய வரலாறு என எடுத்துக்கொண்டால் வரலாற்று காலத்திற்கு முன், வரலாற்று காலத்திற்கு பின் என வகுத்து, வரலாற்றுக்கு பின் என்பதில் வேத காலம், மத்தியகாலம், சமகாலம் என பிறித்து, மத்தியகாலத்திற்குள்ளும் வடக்கு தெற்கு என பிரித்து அதன் கீழ் குப்தர்கள், சாளுக்கியர்கள், சோழர்கள் என அனைவரையும் வகைபடுத்துதல். இதை வெறும் தகவலாக நினைவில் வைத்திருக்கலாம் அனால் அதனால் பயனில்லை. அப்படி வெற்று வரைபடமாக இல்லாமல், இந்த தகவலை ஒரு living databaseஆக உருவகிக்க முடிந்தால் சிறப்பு. அட்டவனையில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கி எங்கு வேண்டுமானாலும் பயனிக்கக்கூடிய தெளிவு. கஜினிமுகமதும் ராஜராஜ சோழனும் சமகாலத்தவர்கள் என்ற பார்வை, கூடவே கஜினி மேலும் தெற்கு நோக்கி வந்திருந்தால் எந்த அரசுகளை சந்திக்க நேர்ந்திருக்கும், என்ன நடந்திருக்கக்கூடும் என தகவல்களை கொண்டுமேலெழக்கூடிய தன்மை போன்றவை.
  3. உங்களுக்கான வடிவை கண்டறிதல்: நீங்கள் சரளமாக வெளிப்படக்கூடிய ஒரு வடிவில் உங்கள் எண்ணங்களைதொகுத்துப் பார்த்தல். ஒரு கட்டுரையாகவோ, ஒரு மேடை உரையாகவோ, ஒரு வகுப்பில் பாடமெடுப்பதுபோலவோ, ஒரு கடிதமாகவோ, ஒரு டயரிக்குறிப்பாகவோ. இந்த முறையில் முழுவதாக வெளிப்பட தொடர்பயிற்சி மிகவும் அவசியம். ஆனால் ஒரு முழு வடிவில் உங்கள் எண்ணங்களை தொகுத்துக் கொள்ள இயலும்.

பின் குறிப்பு:
வேறு ஒரு உரையாடலில் இதை குறிப்பிட்டார். எந்த contextல் என நினைவில்லை.
ஒரு நில காட்சியை எப்படி பார்ப்பது? எப்படி அந்த காட்சியை ஆழ் மனதில் படியவைப்பது?
ஜெ தனது பயணங்களில் எதாவது ஒரு நிலகாட்சி பிடித்துவிட்டால், அங்கு நின்று… குறைந்தது 20 நிமிடங்களாவது… வேறு சிந்தனை ஏதுமில்லாமல் அந்த காட்சியை மட்டுமே ஒவ்வொரு அங்குலமாக பார்ப்போம் என கூறினார். இப்படி ரசித்தால் அந்த காட்சி நமது மனதில் இருந்து மறவாது எனவும்.