‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் ஜெ சென்னையில் நடத்திய கட்டண உரையின் பிறகு அவருக்கு எழுதிய கடிதம்: ஜெ, மரபு குறித்த உங்கள் உரையை இவ்வாறு தொகுத்துக்கொள்ள முயல்கிறேன்: ஒரு செல் உயிரி முதல், அனைத்து உயிர்களிடமும், தான் வாழவேண்டும், பெருக வேண்டுமென்ற உள்ளுணர்வு உள்ளது. அதைத் தாண்டி, தனது சூழலுக்கு ஏற்றவாறு… Continue Reading →
ஜூலை மாத உயிர்மை இதழில் வெளிவந்த, எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர் கே’ என்ற கதை குறித்த எனது பார்வை: கதையை வாசித்திருக்காத நண்பர்களுக்காக, கதை குறித்த சிறு அறிமுகம்: கதைச்சொல்லி, தனது நோக்கத்தை கதையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறான். “மிஸ்டர். கே என்பவரை அறிமுகம் செய்து கொள்ளுதல்.”. சில மாதங்களாகவே அதற்கு முயன்றுக் கொண்டிருக்கிறான்…. Continue Reading →
வாசகசாலை மற்றும் பனுவல் புத்தக விற்பனை நிலையம் இணைந்து நடத்தும் மாதாந்திர கதையாடல் நிகழ்வின் முப்பத்தி ஐந்தாம் அமர்வு கடந்த சனி (03/08/2019) அன்று நடைபெற்றது. நண்பர் காளிபிரசாத் (எழு. காளி), இந்த நிகழ்வில் பேச விருப்பமா என கேட்டிருந்தார். இலக்கிய நிகழ்வுகளில் பேசும் அளவிற்கு வாசிப்பு பின்புலமோ, அனுபவமோ இல்லை என்ற தயக்கம் இருந்தது…. Continue Reading →
விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா -2019ல் நிகழ்ந்த உரைகளின் தொகுப்பு. மாலை விருது விழா, சுருதி டிவி நண்பர்கள் மூலம் காணொளியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிறுகதை அமர்வின் உரைகளையும் கட்டுரையாக பதிவேற்ற எழுத்தாளர்கள் சுனில் கிருஷணன், காளிப்பிரசாத் மற்றும் விஷால் ராஜாவிடம் கேட்டுள்ளேன். அவை கிடைத்தால், நிகழ்வு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு விடும். இப்பொழுதைக்கு, சிறுகதை அமர்வின் உரைகளை… Continue Reading →
மூன்றாம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மே 12 அன்று விருது அறிவிக்கப்பட்டதுமே, விழா ஏற்பாடுகள் சென்னை வட்டத்தின் சார்பில் தொடங்கி விட்டன. எனது பங்களிப்பாக அமைப்பினருடன் இணைந்து செயலாற்ற முடிந்தது சிறு மகிழ்ச்சி. வழக்கம் போல் நேற்று காலையே விருந்தினர்கள், அழைப்பாளர்கள் நண்பர்கள் என அனைவரும் விடுதி அறையில்… Continue Reading →
பூமிக்கு பாரம் சேர்க்க தொடங்கி 27 வருடங்கள். பூமிக்காவது பாரத்தை குறைக்கலாம் என்றால், எடை குறைந்த பாடில்லை. இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம். கடந்த வருடம், சொந்த வாழ்வில் பெரிய மாற்றங்கள். சில புதிய மனிதர்கள், புரிதல்கள், பழைய மனிதர்கள். வாழ்வின் அந்த பக்கங்களை பற்றி இப்பொழுது எழுதுவதாய் இல்லை. அதை தாண்டி,… Continue Reading →
கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? வண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண் குழந்தை தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்? ஒருவர், இவை மூன்றுமே ஒரே வகைதான். மூன்றுமே குற்றம் என கூறினால் என்ன நினைப்பீர்கள்? ஆம், அமேரிக்காவின் ஓஹையோ… Continue Reading →
படைப்பிலக்கியம் சார்ந்து செயல்பட விரும்பும் பலரும், பொருளியல் தேவைகளுக்காக தங்களை ஒரு அலுவலக சூழலில் அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அலுவலக வாழ்க்கை தரும் அழுத்தங்கள், உளசிக்கல்கள் ஒருவரது மனநிலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில், ஒரு படைப்பாளி இந்த சவால்களை எப்படி எதிர்கொள்கிறான்? எனது தேடலினூடே எழுந்த கேள்வி இது. எந்த எழுத்தாளரை, தேர்ந்த… Continue Reading →
கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஜெமோவின் பழைய பதிவுகளை வாசித்துக் கொண்டும் , YouTubeல் அவரது உரைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். தமிழ் ஊடகங்களுக்கு அவர் தந்த பேட்டிகள் மிகக்குறைவு. ஒரு பேட்டியில், தினமலர் அவரிடம் முன்வைத்த கேள்விகள்: நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி……. Continue Reading →
மீண்டும் மீண்டு பதிவை சொல்புதிது குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு சில விவாதங்கள். ஜெமோவுடனான மானசிகமான உரையாடல்கள் தன்மீட்சி கட்டுரை வாசிப்புகள். தெளிவடைந்துவிட்டேனா என தெரியவில்லை. ஆனால், முன்னோக்கி செல்ல பிடிப்புகளை உருவகித்துள்ளேன். 1. அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். இது எனக்கான வேலை இல்லை. நான் இருக்க வேண்டிய இடமும் இல்லை. ஆனால், என் இடத்தை… Continue Reading →
ஜெமோ, தனது தளத்தில் கொடுத்திருந்த சுட்டியின் மூலம், இந்த கதையை வாசித்தேன். அறைக்குள் புகுந்த தனிமை பொதுவாக மொழி கூடி வராத கதைகளில் தேர்ந்த இலக்கியம் நிகழ்வதில்லை என்பது என் எண்ணம். அதை, இந்த கதை மாற்றியுள்ளது. இதை ஒரு சிறந்த படைப்பு என கூறுவதில் எனக்கு தயக்கம் இருந்தாலும், இந்த கதையின் பேசுகளம் முக்கியமானது…. Continue Reading →
நாமக்கல்லில் நடைப்பெற்ற ஜெமோவுடனான புதிய வாசகர் சந்திப்பு குறித்து!
ஆனால் பெரும்பகுதியினர் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தால் பொறாமை கொள்பவர்கள். அதைத் தவிர்க்கவே முடியாது. முப்பதாண்டுகளாக இவர்களின் பொறாமைக்குரிய இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன். நானாக விலகும்வரை அங்குதான் இருப்பேன். அது என் எழுத்துக்களால் நான் உருவாக்கிக் கொண்டது. அதை எவரும் எனக்கு மறுக்க முடியாது. – ஜெயமோகன்
அனர்த்தங்கள் எழுதி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வாழ்க்கையில் பல மாற்றங்கள். MBA முடித்து, ஒரு நிறுவனத்தில் …
ஜாஜா, மஹாபாரத காலகட்ட சமுக-அரசியல் அமைப்பில் வேதங்களின் பங்கு குறித்த சிறு அறிமுகத்தின் பின் பிரகதாரண்யக உபநிடதம் குறித்துப் பேசத் தொடங்கினார்.
பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரணதண்டனையை ஆயுள் கைதாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நன்னாளில், அற்புதம்மாள், “என் மகனுக்குத் தூக்கு குறைக்கப்பட்டாலும், மற்ற அப்பாவிகளுக்காக என் போராட்டம் தொடரும்” என கூறி உள்ளார். ஒரு சிறு உந்துதலில் இந்திய அமைப்பில் தூக்கு தண்டனை பற்றி கொஞ்சம் ஆராய தொடங்கினேன்! இந்திய தண்டனைச் சட்டம் 8… Continue Reading →
“இப்பல்லாம் சாதி யாரு சார் பாக்றாங்க?” என பேசி விட்டு… சொந்த சாதியில் வரன் பார்க்கும் சமுகத்தில் இளவரசனின் மரணம் என்ன வகை மாற்றத்தை கொண்டு வரும் என தெரியவில்லை… சாதி இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் சமூகம் தான்… சாதி விட்டு திருமணம் செய்வது ஏதோ அவமானகரமான செயல் என்பது போல் சொந்தங்கள் பார்ப்பதால்… Continue Reading →
day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன…. கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில், என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்?? B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து திருச்சி பாரதிதாசன் மேலாண்மை… Continue Reading →
“நோய் நாடி நோய் முதல் நாடி” என்பது வள்ளுவன் வாக்கு. இதே வழியில் பெண்கள் மீதான வன்முறைகளை நோக்குவோமேனால்… கற்ப்பழிப்பு.. கற்பழிக்கும் எண்ணம் நோய் அல்ல… என்னை பொறுத்தவரை அது ஒரு நோயின் விளைவே. கொஞ்சம் ஆழமாகவே யோசிப்போம். கற்ப்பழிப்பு, பெண்ணின் மீதான பாலியல் வன்முறை அனைத்துமே பெண்ணை சக உயிராக மதிக்க இயலாத நிலையின்… Continue Reading →
சென்ஷேஷனலா ஒரு விஷயம் கிடைச்சுருச்சுனு பதிவு எழுதியே ஆகனுமான்ற எண்ணத்துலையே அமைதியா இருந்தேன்.. ஆனா அத தொடர்ந்து நடக்ற விஷயங்கள் எதுவும் என்ன சும்மா இருக்க விடமாட்டேன்து. ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பழுதடைந்த நிலையில் நான்காம் தூணான ஊடகம் இந்த விஷயத்தை சரியாக கையாளுகிறதா?? கொலை, கற்ப்பழிப்பு ஏன் கற்ப்பழித்து கொலை அனைத்தும் நமக்கு… Continue Reading →
© 2024 பிழைகள் — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑