(முதல் பாகம்)
அரும்பு முகையாக
அலர்ந்த செய்தி
அளிக்கு தானாய் தெரிதல் போல்
அன்பே, நம்
அன்பை நமக்குள்ளே பகிர்ந்து கொண்டோம்…
கம்பனிடம்
கவி கற்க
நித்தம் வந்து,
சித்தம் நிறைந்து
காதல் கற்பித்தாய்
விழிவழி நாம் பேசிய காதல் மொழியை
செவிவழி
ஒட்டகூத்தன்
ஒட்டு கேட்டானோ??
கோமகள் கரம் பிடிக்க
கவிகோ மகன்
கொண்ட ஆசையை
கொடிய தவறென கருத்தில்
கொண்டு,
கொந்து, அழியா காதலை
கொன்று விட  எண்ணம்
கொண்டான்
கொற்றவனிடம் நாம்
கொண்ட காதலை
கொச்சை படுத்தி
கொடிய
சொற்கள் செப்பினான்
குலத்தில் துங்கன்
குலோத்துங்கன்!
சாகரம் தாண்டி
சாத்துல கொடி நட்டு,
பாண்டியனை
மண்டியிட செய்து
வீராபிஷேகம் கொண்டு
வீரத்தை நிலை நாட்டி,
பரகேசரி என
பட்டம் கொண்டவன்!
திருநிலையில்லா சோழ
நிலைபாட்டினை,
திருபணிகள் மூலம்
நிலைநாட்டி,சமையம் வளர்த்து
இல்லை என்போர்க்கு
இல்லை என
இயம்பாது உதவி, தர்மம் வளர்த்து
பாரபட்சமின்றி
பாவமைக்கும்
பாவலர்களை
பாராட்டி, தமிழ் வளர்த்தவன்!
கம்பரின்
கவி புலமை
கண்டு வியந்து
கவி சக்ரவத்திக்கு
சக்ரவத்திக்கு
சமமான மதிப்பளித்தவன்!!
தனி மாளிகையும்
பணி பெண்டிரும்!
அரசவை
ஆசனம்
அரசனுக்கு
அடுத்து!!
சரியாசனம் தந்த்தால்
சம்பந்தம் செய்ய
சம்மதித்திடுவான்
என
எத்தனிக்கவில்லை.
அன்பே, நம் அன்பின்
ஆழத்தை, நாம்
இருவர் கொண்டுள்ள நேசத்தை
ஈடுஇணையற்ற காதலை,
உன் கரம் பற்றி
ஊரார்முன்
என்னவளென காட்டி
ஏந்திழை புட்டி
ஐயலை காணும்
ஒவ்வொருவரும்,
ஓவியம் உயிர் பெற்றதோ என
ஔவியம் கொள்ள வைக்க எனது ஆவலை
அரசனிடம் எடுத்துரைத்து
குளோதுங்கனின்
குளவிளக்கை
கரம் பிடிக்கவே
எண்னிணேன்!
காலம் கணிந்துவர
காத்திருக்கையில்
காலத்தின் சதி..
(தொடரும்…)