கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
வண்புணரப்பட்டு கர்பமான பெண் தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
வண்புணரப்பட்டு கர்பமான 11 வயது பெண் குழந்தை தன் கருவை கலைப்பதைப்பற்றி என்ன எண்ணுகிறீர்கள்?
ஒருவர், இவை மூன்றுமே ஒரே வகைதான். மூன்றுமே குற்றம் என கூறினால் என்ன நினைப்பீர்கள்?
ஆம், அமேரிக்காவின் ஓஹையோ மாகாணத்தில் இவை அனைத்துமே ஒன்று. மூன்றுமே குற்றம் என்று ஒரு சட்டத்தை இயற்றி உள்ளனர்.
அமேரிக்காவில், டெமாக்ரட் ஆட்சி செய்யும் மாகாணங்கள் சில கருகலைப்பை தடை செய்து சட்டங்கள் இயற்றியுள்ளன. வண்புணர்வு, incest, underage என எந்த காரணத்திற்காக கருகலைப்பு செய்தாலும் குற்றம். சில சமயங்களில் 99 வருடங்கள் வரை.
மாகாணங்களும் சட்டங்களும்: https://www.cnn.com/2019/05/16/politics/states-abortion-laws/index.html
அமேரிக்க உச்சநிதிமன்றம் கருகலைப்பை ஆதரித்து Roe v. Wade, வழக்கில், 1973ல் தீர்ப்பு அளித்தது. அதன் அடிப்படையில் இந்த மாகாண சட்டங்கள் செல்லாது என்றாலும், மாகாண சட்டங்களுக்கு எதிரான வழக்குகள் உச்சநீதிமன்றம் வரை சென்றால், 1973 தீர்ப்பு மறு பரிசீலனை செய்யப்படலாம் என்பது அவர்களின் எதிர்பார்ப்பு.
Pro-Life சார்புள்ள டிரம்ப், டெமாக்ரடிக் சார்பு நீதிபதிகளை உச்சநீதிமன்றத்தில் பதவியமர்த்தியுள்ளதால் தீர்ப்பு Pro-Lifeற்கு சாதகமாக வரலாம் என்று நம்புகிறார்கள். நல்லவேலை, டிரம்ப், incest, rape போன்றவற்றிக்கு விலக்கு தேவை என்ற நிலையை எடுத்துள்ளார்.
As most people know, and for those who would like to know, I am strongly Pro-Life, with the three exceptions – Rape, Incest and protecting the Life of the mother – the same position taken by Ronald Reagan. We have come very far in the last two years with 105 wonderful new…..
— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2019
ஆனால், அடிப்படையில் ProLife சட்டங்கள் கிறித்தவ மதநம்பிக்கை சார்ந்தது. அரசில், மத தலையீட்டை முற்றிலும் நீக்க வேண்டும் என்ற குரலும் வலுக்கிறது.
வண்புணர்வு குறித்த சட்டங்கள் மேலும் எதிர்ப்புகளை சந்தித்து வருகின்றன. வன்புணர்வில் உண்டான குழந்தையை அந்த பெண் வாழ்நாள் முழுதும் சுமக்க வேண்டும் என கூற எவ்வளவு வன்மம் வேண்டும்? கூடவே, rapistற்கு பெற்றோருக்கான visitation rights, custody rights அனைத்தையும் சட்டம் வழங்குகிறது. “கெடுத்தவனுக்கே பொண்ண கட்டி வைக்கும்” கதை தானே இதுவும்.
https://www.cnn.com/2016/11/17/health/parental-rights-rapists-explainer/index.html
Pro Live vs Pro Choice, உயிர் எப்பொழுது உருவாகிறது என்ற கேள்வியில் இருந்து, ஒரு கரு உயிர் வாழ்வதற்கான உரிமையை எப்பொழுது பெறுகிறது என்பதில் இருந்து தொடங்குகிறது.
உலகலவில் முதல் 20 வாராங்களில், அல்லது முதல் 3 மாதங்களில் கருகலைப்பு அனுமதிகப்படுகிறது. அதன் பிறகு, தாய் சேய் நலனுக்கு பாதிப்பு என்றால் அனுமதிக்கிறது. இந்த வார வரையறையின் அடிப்படை எனக்கு புரியவில்லை. 20ம் வாரம் செய்யலாம் ஆனால் 23ம் வாரம் கருகலைப்பு கூடாது என்ற சட்டம் எதை அடிப்படையாகக் கொண்டது? நான் தேடியவரை பதில் இல்லை.
இந்த புது சட்டங்கள், கருவின் இதயதுடிப்பை அடிப்படையாகக் கொள்கிறது. அதாவது கரு உருவாகி 6 வாரங்கள்.
“Is this abortion illegal at 22 days with a highly invasive ultrasound or is it illegal at 9 weeks when we hear a heartbeat with a stethoscope?” – Mary Throne
பெரும்பாலான பெண்களுக்கு அவர்கள் கருவாகியிருப்பதே ஆறு வாரங்களுக்கு பிறகு தான் தெரியவரும். கருகலைப்பிற்கு கிட்டத்தட்ட வாய்ப்பே இல்லாமல் செய்ய்யும் இந்த சட்டங்கள்.
ஒரு பெண், கரு கொள்வதும், கலைப்பதும் அவளது தனியுரிமை.அதில் அரசோ, பிறரோ தலையிட எந்த முகாந்திரமும் இல்லை.
அந்த கரு தனி உயிர் என்ற அடிப்படையில், அந்த கருவின் உயிரை காக்க மட்டுமே அரசு செயல்படுகிறது என்றால்,
தற்போதைய சட்டம் கருவை மனிதனாக ஏற்பதில்லை. மனித உரிமை போன்ற சட்டங்கள் அனைத்தும் பிறந்த உயிர்களை மட்டுமே கணக்கில் கொள்கிறது.
இதன் அடிப்படையையிலே, தாயின் உரிமை சட்டப்படி இல்லாத கருவின் உயிரை விட மேலானது.
சட்டத்தை தாண்டி யோசித்தால்:
1) பெண்ணின் தனியுரிமை எங்கு முடிகிறது, கருவின் உயிர் உரிமை எங்கு தொடங்குகிறது?
2) கருவின் உயிர் உரிமையை பாதுகாக்க அரசு எந்த அளவிற்கு தலையிடப்போகிறது?
முதல் சில மாதங்கள் வரை கருகலைப்பை அனுமதிப்பதன் மூலம்,
1) பெண்ணின் உரிமை பாதுகாக்கப்படுகிறது. முதல், சில மாதங்கள் கரு முளையம் அல்லது சிசுவாக உள்ள நிலையில், அதன் மூளை மற்றும் மற்ற அமைப்புகள் வளராததால், கருவை ஒரு மனிதனாக உருவகித்து, உரிமைகளை வழங்க வேண்டியதில்லை. மேலும், உயிராக சாத்தியமுள்ள கருவின் உரிமையை விட, ஏற்கனவே உள்ள உயிரின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிப்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிலைப்பாடு.
2) கருவை சுமக்கும் முடிவு, மக்களுடையது என்பதால், அரசு எந்த பொறுப்பையும் ஏற்க வேண்டியதில்லை.
பொதுவாக, ஏற்கப்பட்ட நிலைப்பாடு இதுவே.
இதைத் தாண்டி, கருவை கலைக்க சாத்தியமே இல்லாமல் செய்யும், இவ்வகை புதிய சட்டங்கள் தனிமனித விஷயங்களில் அரசின் தலையீடாக மட்டுமே கொள்ள வேண்டும். தீவிரமாக எதிர்க்கப்பட வேண்டும்.
அந்த சட்டங்களை ஆதரிப்பவர்கள், கரு உருவான பொழுதே, அது உயிர்வாழும் உரிமையையும் பெற்றுவிடுகிறது என்கிறார்கள். ஆனால், அந்த கருவின் உயிர்வாழும் உரிமையை காக்க, விருப்பமில்லாத பெண்ணின் Body Autonomy, அவள் உடல் சார்ந்து அவள் முடிவெடுக்கக்கூடிய உரிமையை பரிப்பது எப்படி சரியாகும்?
In general we as a society allow parents to abandon their children to the state or other willing caretakers if they are unwilling or unable to care for the child. If you assume responsibility for a child and do not execute that duty faithfully then you have are guilty of neglect, but if you aren’t going to assume that responsibility the only real obligation is to surrender the child responsibly. With pregnancy there is no equivalent to surrendering the fetus responsibly that doesn’t involve nine months of allowing that child access to your body.
-u/AusIV, reddit
Pro Life vs Pro Choice விவாதத்திற்கு, முடிவு இருக்கபோவதில்லை. ஆனால், இதில் அரசு ஒரு சார்பாக முடிவெடுப்பது சரியா என்பதே என் கேள்வி.
வேறு ஒரு உயிரின் உரிமையை பாதுகாக்க, நீ உன் உரிமையை வாழ்க்கை முழுவதற்கும் விட்டுகொடு என கேட்பது, அடிப்படையில், குழந்தையை பெற்றெடுப்பது உன் கடமை. அதில், நீ முடிவு செய்ய எதுவும் இல்லை என பெண்களை நோக்கி சொல்வது தானே?
இறுதியாக,
The question of abortion involves much more than the termination of a pregnancy: it is a question of the entire life of the parents. As I have said before, parenthood is an enormous responsibility; it is an impossible responsibility for young people who are ambitious and struggling, but poor; particularly if they are intelligent and conscientious enough not to abandon their child on a doorstep nor to surrender it to adoption. For such young people, pregnancy is a death sentence: parenthood would force them to give up their future, and condemn them to a life of hopeless drudgery, of slavery to a child’s physical and financial needs. The situation of an unwed mother, abandoned by her lover, is even worse. I cannot quite imagine the state of mind of a person who would wish to condemn a fellow human being to such a horror. I cannot project the degree of hatred required to make those women run around in crusades against abortion.
— Ayn Rand
Liberalism போன்ற, தனி மனித உரிமை சார்ந்த கருத்துக்களை உரக்க முன்னெடுக்கும் அமேரிக்காவில் இவை நடைபெறுவது நிஜமாகவே கவலை அளிக்கிறது. உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது என பார்ப்போம்.