ஜெமோ, தனது தளத்தில் கொடுத்திருந்த சுட்டியின் மூலம், இந்த கதையை வாசித்தேன்.
அறைக்குள் புகுந்த தனிமை
பொதுவாக மொழி கூடி வராத கதைகளில் தேர்ந்த இலக்கியம் நிகழ்வதில்லை என்பது என் எண்ணம். அதை, இந்த கதை மாற்றியுள்ளது.
இதை ஒரு சிறந்த படைப்பு என கூறுவதில் எனக்கு தயக்கம் இருந்தாலும், இந்த கதையின் பேசுகளம் முக்கியமானது.
உணர்வுகளை மிக நேரடியாக சொல்லிச் சென்றாலும், அவற்றில் வாழ்க்கை குறித்த நுண்ணிய அவதானிப்புக்களை காண இயல்கிறது. நவின வாழ்க்கையின் யதார்த்தத்தை பிரதிபலிக்கும் முயற்சிகளில் இது முக்கியமானதே!