எஸ் ராவின் உறுபசி தவிர்த்து அவர் எழுத்து முன்பு பரிச்சயமில்லை. எந்த முன்னனுமானமும் இல்லாமல் வாசிக்க தொடங்கினேன்.
கதையே இல்லனு யாரும் சொல்ல கூடாதுனோ என்னவோ, 4 கதை ஒண்ணா எழுதி இருக்கார். இவை அனைத்தையும் ஒன்று சேர்க்கும் ஒரு பிணைப்பாக 5வது கதை.
முன்னுரையிலும் preludeலும் சொல்ல பட்டிருக்கும் அளவிற்கு எதுவும் இல்லை. ஆங்கிலேயர்கள் இந்தியா நோக்கி வருவதில் தொடங்கி அவர்களது ஆட்சி அமைப்பு அடிப்படையாகிறது. அந்த கால சென்னை உருவான பிறகு அங்கு வாழும் 4 குடும்பங்களின் கதையை விவரிக்கிறார். வழகக்கமான ஒரு அத்தியாயத்தில் ஒரு கதையும் சம்மந்தமே இல்லாத வேறு கதையை மறு அத்தியாயத்தில் எழுதும் பாணி தான், என்ன கடைசி வரை அவர்களுக்குள் எந்த தொடர்பும் இல்லாமல் போகிறது.
கதை மாந்தர்கள்:
அத்தர் தயாரிக்கும் கரீம், அவரின் 2 மனைவிகள். ஆண் சந்ததி வேண்டி அவர் மணக்கும் மூன்றாம் மனைவி.
பத்ரகிரி, அவன் மனைவி விசாலா. மேல்படிபிற்கு லண்டன் செல்லும் பத்ரகிரி தம்பி திருச்சிற்றம்பலம், அவன் மனைவி தையல். அவளுக்கு பத்ரகிரி மூலம் பிறக்கும் பிள்ளை.
தோழி எலிசபத்திற்கு,தம்பியுடன் போராடி பெற்ற சொத்து முழுவதையும் எழுதி வைக்கும் கிருஷ்ணப்ப கரையாளர்
ஒரு நாயை எந்த கேள்வியும் இல்லாமல் பின் தொடரும் சதாசிவ பண்டாரம்.
இவர்களின் வாழ்வை சுற்றி நகர்கிறது நாவல். இடையே பல சமூக விஷயங்களை தொட்டுச் செல்ல முயல்கிறார். லண்டனின் தொழிலாளர்கள் முதல் நம்மவர்கள் ஆங்கிலேயர்களால் நடத்த பட்டவிதம் வரை பல விஷயங்கள் பேசினாலும் எதிலும் ஆழம் இல்லை.  இந்தியாவில் ஆங்கிலேயர்கள் நுழைவதில் தொடங்கி பல நூறு வருடங்கள் பின்பு வரை கதை நீண்டாலும், நான்கு சிறு பகுதிகள் மட்டுமே நாம் கண் முன் விரிகிறது.
ஆகவே,
எஸ் ராவை படிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால்
அக்கால வாழ்வு முறையை அறிய ஆர்வம் இருந்தால்
ஏதேனும் ஒரு நாவல் படிக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தால்
யாமம் வாசிக்க தொடங்குங்கள்!
கதை மிகவும் சாதாரண கதை தான், ஆனால் சாதாரணர் என கண்டு கொள்ள படாமல் போன வாழ்வை பற்றி எழுதும் முயற்சிதான் இந்த நாவல்!
யாமம் – above average!