பொறுப்பாகாமை
பிழைகள் என்ற தளம் என் பிழைகளின் திரட்டி என்பதால் இங்கு வெளியிடப்படும் செய்திகளை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் சிரியசாக எடுத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். மீறி சீரியசாக எடுத்து கொண்டு BP, sugar போன்றவை எகிறி ICUவில் அனுமதிக்கப்பட்டால் மருத்துவ செலவுகளை நிர்வாகம் எற்காது!
பிழைகளில் வெளியிடப்படுபவை அனைத்தும் என் சொந்த கருத்துக்களே. பலருக்கும் பல மாற்று கருத்துக்கள் இருக்கலாம். தளத்தில் உள்ள புள்ளிவிவரங்கள் அனைத்தும் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவையே மற்றும் அனைத்திற்கும் மூலதிற்கான தரவுகள் அந்தந்த பதிவுகளில் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் நம்பகதன்மையை முடிவு செய்வது முழுவதும் பயனரின் பொறுப்பு. “கேப்டன் சொன்னாதான் நம்புவேன் எந்த படத்துல இத சொன்னார்னு” போன்ற கேள்விகளை தவிர்க்கவும்!
உங்கள் கணினி, கைபேசி, அலைபேசி, tablet, ipod, tv, ipad, iphone மற்றும் அலுவலக கணினியை பராமரிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. இலவசமாக கிடைக்கும் avast anti virusயை பிழைகள் பரிந்துரைக்கிறது (பிகு: இந்த பரிந்துரைக்கு மாற்றாக எந்த வித பண/பொருள்/தானிய வெகுமதியும் ஏற்றுக்கொள்ளபடவில்லை). torrentல் தேடி pro version antivirus install செய்வது தங்கள் சாமர்த்தியம். இதை கூற நேருவதன் காரணம் தளத்தில் எந்த தரவையாவது சொடுக்கி விட்டு மூன்றாம் நபர் தளங்களில் இருந்து நச்சு நிரல் பதிவிறங்கி விட்டது என புகார் அளிக்க வேண்டாம். formatting செலவு ஏற்றுக்கொள்ளபட மாட்டாது!
விமர்சனங்கள், மாற்று கருத்துக்கள், எதிர் கருத்துக்கள், கழுவி உத்தல்கள், அழுகிய தக்காளி, முட்டை, செருப்புகள், சோடா பாட்டில்கள் போன்றவை வரவேற்கபடுகின்றன. பொன்னாடை, பூங்கொத்து, மலர் மாலை, காசோலை, திரைப்பட நுழைவு சீட்டு, விமான பயண சீட்டு, புத்தகம், கடிகாரம், அலைபேசி, chocolates, mementos, gifts, cash n kind போன்றவையும் ஏறுக்கொள்ளப்படும். மேடையில் வந்து விழும் அனைத்தும் விழா கமிட்டிக்கே சொந்தம் என்பதால் உங்கள் பின்னூட்டங்கள் அனைத்தும் பிழைகளுக்கே சொந்தம். அவற்றை திருத்தவோ, நிராகரிக்கவோ தளத்திலோ வெளியேவோ தளத்தின் விளம்பரதிற்கு பயன்படுதவோ பின்னுட்டம் அளிப்பதன் மூலம் பிழைகளுக்கு முழு அதிகாரம் அளிக்கிறீர்கள்.
மாற்று கருத்துகளை வரவேற்க வேண்டியும், ஆரோக்கியமான விவாதத்தை முன்னிருத்தவும் உங்கள் கருத்துகளை, பின்னூட்டங்களை வரவேற்கிறேன். பிறரின் மனதை/நம்பிக்கையை புண்படுத்தாத, தகாத வார்த்தை பிரயோகங்கள் அற்ற பின்னூட்டங்கள் எந்த வித தணிக்கையும் இல்லாமல் வெளியிடப் படும் என உறுதி அளிக்கிறேன்.
பின்னூட்டதில் தாங்கள் விருப்பத்தின் பேரில் அளிக்கும் தங்கள் மின்னஞ்சல் முகவரி போன்றவை எனது பார்வையை தாண்டி வேறு எவரையும் சென்றடையாது என உறுதி அளிக்கிறேன்.
மாற்றம் என்பதே நிரந்தரம்! உலகை பற்றிய உலக விஷயங்கள் குறித்த எனது நிலைப்பாடு எனது புரிதலின் விஸ்தாரத்தை பொறுத்து மாற்றம் அடையலாம். அப்படி மாறுபடுகையில் பழைய பதிவுகளுக்கு மாற்றான கருத்துகளை வெளியிட நேரலாம் என்பதையும் பதிவு செய்ய கடமை பட்டுள்ளேன். அதே நேரம் தகவல் சார்ந்த பிழைகளை நிவர்த்தி செய்வது தவிர்த்து வெளியான பதிவுகள் எந்த காரணத்திற்காகவும் திருத்தப்படவோ, நீக்கவோ பட மாட்டாது என உறுதி அளிக்கிறேன்.
மேலும் நடுநடுவே “எந்த தனி நபரையோ” “மதத்தையோ, குழுவையோ, சமுகத்தையோ காயபடுத்தும் எண்ணத்துடன் எழுதப்பட்டவை அல்ல” சேர்த்துக்கொள்ளவும்!
Leave a Reply