Category அனுபவங்கள்

200 கிலோமீட்டரில் 2,000 ஆண்டுகள்

ஜூன் 17 காலைல வீட்லருந்து கிளம்பனேன்… இரவு பாண்டியில் தங்குவதாக திட்டம்… வழில கொஞ்சம் கோவில்களை பார்ககனும்… காலை 6 மணிக்கு கிளம்பி… 11 மணிக்கா பண்டி போய் சேர்ந்து… அன்னிக்கே உள்ளூர்லையும் சுத்தி பார்த்துக்கலாம்ன்றது பிளான்… ஆனா முன்னாள் நைட் தூக்கமே வரல. விடிய விடிய முழிச்சிக்கிட்டிருந்து… விடியற்காலை தூங்க போறதுனு பழகிபோச்சு. இதோ… Continue Reading →

தமிழக வரலாறு – சுருக்கமாக

பயணக்குறிப்புகளுக்குள் செல்லும் முன், தமிழக வரலாற்றை சுருக்கமாக அறிந்துகொள்வது உதவியாக இருக்கும் என எண்ணுகிறேன். மனிதன் எழுத தொடங்கியபொழுது தான் வரலாறு தொடங்குகிறது என்பதால், அதற்கு முன்புள்ள காலத்தை வரலாற்றுக்கு முந்தைய காலம் என குறிப்பிடுகிறார்கள். உலகம் உருவான நாளில் இருந்தே வரலாற்றுக்கு முந்தைய காலம் தொடங்கிவிடுகிறது என்றாலும், தொல்லியலாளர்களின் கவனம் மனிதன் / மனிதன்… Continue Reading →

பயணப்படுதல்

எனது பணி சார்ந்த வாழ்வை மறுவரையறை செய்வதை பற்றி முன்பே குறிப்பிட்டிருந்தேன்… அதன் முதல் படி, இப்பொழுதிருக்கும் வாழ்விலிருந்து என்னை துண்டித்துக்கொள்வது. கிட்டதட்ட 6 மாதங்களாகவே பணியிடத்தில் இடர்கள்.. செயலுக்கம் முழுமையாகவே வற்றிவிட்ட நிலை. அனைத்தையும் அழித்துவிட்டு, முதலிருந்து தொடங்கினால் நன்றாக இருக்கும் என பல நாட்களாக முயன்று… ஜூன் 8 அன்று… அலுவலகத்தில் எனது… Continue Reading →

தானாதல்

வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன்… Continue Reading →

தன்வழியறிதல்

இன்னும் மேலே மேலே என்று தான் தேடிக்கொண்டிருந்தேன். 11ல் வரலாறும், சமூகவியலும் பிடித்தாலும் அறிவியல் தான் மேலானது என அறிவியல் பிரிவில் சேர்ந்தேன். SRMல் பொறியியல் முடித்த பின், எல்லாரும் ITக்கு செல்கிறார்கள், அதை எவர் வேண்டுமானாலும் செய்யலாம், என்னால் இன்னும் மேலே செல்ல இயலும் என இந்தியாவின் தலை சிறந்த நிறுவனங்களில் ஒன்றில் MBA… Continue Reading →

வெண்முரசின் உன்மத்தம்

வெண்முரசு நாவல் நிறையின் முடிவில் ஒரு வாசகனாக நான் பெற்றவை

வேணு வேட்ராயன் – குமரகுருபரன் விருது

விஷ்ணுபுரம் -குமரகுருபரன் விருது- 2020 ஜெ, சென்ற ஆண்டு, சமகால சிறுகதைகள் மீதான விவாதம், தமிழ் இளங்கவிஞருக்கு, மூத்த மலையாள கவிஞர் பி ராமன் அவர்களின் வாழ்த்துரை என ஒரு பெரிய நிகழ்வாக விஷ்ணுபுரம் குமரகுருபரன் மூன்றாம் ஆண்டு விழா நடைப்பெற்றது. இவ்வருடம், ஊட்டி குரு நித்யா காவிய முகாம் ஒத்திவைக்கப்பட்ட பொழுதே இவ்வாண்டிற்கான குமரகுருபரன்… Continue Reading →

கதையாடல் – வாசகசாலை

வாசகசாலை மற்றும் பனுவல் புத்தக விற்பனை நிலையம் இணைந்து நடத்தும் மாதாந்திர கதையாடல் நிகழ்வின் முப்பத்தி ஐந்தாம் அமர்வு கடந்த சனி (03/08/2019) அன்று நடைபெற்றது. நண்பர் காளிபிரசாத் (எழு. காளி), இந்த நிகழ்வில் பேச விருப்பமா என கேட்டிருந்தார். இலக்கிய நிகழ்வுகளில் பேசும் அளவிற்கு வாசிப்பு பின்புலமோ, அனுபவமோ இல்லை என்ற தயக்கம் இருந்தது…. Continue Reading →

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது விழா 2019

விஷ்ணுபுரம் குமரகுருபரன் விருது விழா -2019ல் நிகழ்ந்த உரைகளின் தொகுப்பு. மாலை விருது விழா, சுருதி டிவி நண்பர்கள் மூலம் காணொளியாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. சிறுகதை அமர்வின் உரைகளையும் கட்டுரையாக பதிவேற்ற எழுத்தாளர்கள் சுனில் கிருஷணன், காளிப்பிரசாத் மற்றும் விஷால் ராஜாவிடம் கேட்டுள்ளேன். அவை கிடைத்தால், நிகழ்வு முழுமையாக ஆவணப்படுத்தப்பட்டு விடும். இப்பொழுதைக்கு, சிறுகதை அமர்வின் உரைகளை… Continue Reading →

ஜெவுடன் ஒரு நாள்!

மூன்றாம் ஆண்டு குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. மே 12 அன்று விருது அறிவிக்கப்பட்டதுமே, விழா ஏற்பாடுகள் சென்னை வட்டத்தின் சார்பில் தொடங்கி விட்டன. எனது பங்களிப்பாக அமைப்பினருடன் இணைந்து செயலாற்ற முடிந்தது சிறு மகிழ்ச்சி. வழக்கம் போல் நேற்று காலையே விருந்தினர்கள், அழைப்பாளர்கள் நண்பர்கள் என அனைவரும் விடுதி அறையில்… Continue Reading →

சுப்ரமணியத்திலிருக்கும் நாஞ்சில்…

படைப்பிலக்கியம் சார்ந்து செயல்பட விரும்பும் பலரும், பொருளியல் தேவைகளுக்காக தங்களை ஒரு அலுவலக சூழலில் அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. அலுவலக வாழ்க்கை தரும் அழுத்தங்கள், உளசிக்கல்கள் ஒருவரது மனநிலையை, வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கக்கூடிய சூழ்நிலையில், ஒரு படைப்பாளி இந்த சவால்களை எப்படி எதிர்கொள்கிறான்? எனது தேடலினூடே எழுந்த கேள்வி இது. எந்த எழுத்தாளரை, தேர்ந்த… Continue Reading →

மூன்று முகங்கள்

மீண்டும் மீண்டு பதிவை சொல்புதிது குழுமத்தில் பகிர்ந்திருந்தேன். அங்கு சில விவாதங்கள். ஜெமோவுடனான மானசிகமான உரையாடல்கள் தன்மீட்சி கட்டுரை வாசிப்புகள். தெளிவடைந்துவிட்டேனா என தெரியவில்லை. ஆனால், முன்னோக்கி செல்ல பிடிப்புகளை உருவகித்துள்ளேன். 1. அலுவலகத்தில் வேலை செய்ய வேண்டும். இது எனக்கான வேலை இல்லை. நான் இருக்க வேண்டிய இடமும் இல்லை. ஆனால், என் இடத்தை… Continue Reading →

புதிய வாசகர் சந்திப்பு – நாமக்கல்

நாமக்கல்லில் நடைப்பெற்ற ஜெமோவுடனான புதிய வாசகர் சந்திப்பு குறித்து!

மீண்டும் மீண்டு…

அனர்த்தங்கள் எழுதி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. வாழ்க்கையில் பல மாற்றங்கள். MBA முடித்து, ஒரு நிறுவனத்தில் …

வெண்முரசு சென்னை கூடுகை – தை 2050.

ஜாஜா, மஹாபாரத காலகட்ட சமுக-அரசியல் அமைப்பில் வேதங்களின் பங்கு குறித்த சிறு அறிமுகத்தின் பின் பிரகதாரண்யக உபநிடதம் குறித்துப் பேசத் தொடங்கினார்.

அனர்த்தங்கள்!

day by day, day by day வாழ்க்கை பயணம் day by day என இதோ 21 வருடங்கள் கடந்து விட்டன…. கொஞ்சம் ஒதுங்கி நின்று அவதானிக்கையில்,  என்ன செய்தேன்.. என்ன செய்து கொண்டிருக்கிறேன்?? B.Tech முடித்தாய்று. WIPROவில் கிடைத்த வேலையையும், அயல்நாட்டில் MBA பயில கிடைத்த அழைப்பையும் மறுத்து  திருச்சி பாரதிதாசன் மேலாண்மை… Continue Reading →

© 2025 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑