Category எண்ணங்கள்

தன்னுணர்வின் செயலூக்கம்!

தளத்தில் எழுதி, ஏன் பொதுவாக எழுதியே நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்ற பதிவு மார்ச் 2022ல் எழுதியது. அதன் பின்னான மாற்றங்களை, இங்கு எனக்கு நானே சொல்லிக்கொள்கிறேன். மார்ச்-ல் பூமி அமைப்பில் எனது இடம், பங்களிப்பு பற்றிய கேள்விகளையும், எனது வாழ்க்கை பயணம் எதை நோக்கி என்ற கேள்வியையும் முன்வைத்து முடித்திருந்தேன். அலுவலகத்தில் இரண்டு மாத… Continue Reading →

இறைவி

நான் மகிழ்ச்சியாக இல்லை என ஒரு பதிவு எழுத வேண்டும் என்று தான் நேற்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஒரு வாரத்திற்கும் மேலாக உடல்நிலை சரியில்லை, மனநிலையும் திடமாக இல்லை. நேற்று மருத்துவரை பார்த்து, இரத்த பரிசோதனைக்கு அளித்துவிட்டு வந்தேன். இன்று முடிவுகளை வாங்க செல்ல வேண்டும். தங்கையை பேருந்து நிறுத்தத்தில் இருந்து அழைத்துக்கொண்டு, முடிவுகளை பெற்றுக்கொண்டு, இன்னொரு… Continue Reading →

திரல்தல்

உலகமும் உடலும் மனமும் திரும்ப திரும்ப எதிர்வைக்கும் எண்ணங்களுக்கு எதிராக என்னை நானே மீண்டும் மீண்டும் வரையறை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு ஒவ்வொரு வரையறையிலும் மேலும் கூர்மையாக்கிக் கொண்டிருக்கிறேன் என நம்புகிறேன். நான் செயலூக்கம் கொள்ள, செயல்பட இந்த வரையறை மிகவும் அவசியமாகிறது. மற்றவரிடமிருந்து, என்னிடமிருந்து எழும் கேள்விகளுக்கு பதிலாக இந்த வரையறை அமைய வேண்டும்…. Continue Reading →

Quick recap

வாழ்வை தொகுத்துக்கொள்ள எழுதுவதில் ஏன் இந்த தயக்கம் என என்னையே கேட்டுக்கொள்கிறேன். எழுத தொடங்குவது அத்தனை எளிதாக இல்லை.. ஆனால் ஏன்? செய்ய தவறிய விஷயங்கள் அனைத்தும் கண் முன் வந்து செல்கின்றன… எழுதும் செயலே ஒரு வகை சுய அறைகூவல் தானே.. அங்கு தோல்விகளை பறைசாற்றுவது இயல்வதல்ல. முக்கியமாக, எழுதுவது என்பது என்னை திறந்து… Continue Reading →

தன்னையறிதல் – ஜெ

2022 புத்தாண்டு அன்று எழுத்தாளர் ஜெயமோகன் நண்பர்களிடையே ஆற்றிய சிறு உரையின் எழுத்து வடிவம். ஓவியர் Edvard Munchன் புகழ்பெற்ற ஓவியங்கள் இரண்டு.. அவர் ஸ்பானிஷ் ஃப்ளுவால் பாதிகப்பட்ட பொழுது, தன்னுடைய தோற்றத்தை கண்ணாடியில் பார்த்து தானே வரைந்த Self Portrait with the Spanish Flu… மற்றும் ஃப்ளு விலகி, அதன் பாதிப்பு முழுதாக… Continue Reading →

ஒரு கனவும் ஒரு பயணமும்!

தன்வழியறிதலில் தொடங்கி… தானதல் என உணர்வுகளை எழுதி வந்தாலும், பெரிய கனவுகளோ திட்டவட்டமான குறிக்கோள்களோ இல்லமல் இருந்து வந்தன. கடந்த சில வருடங்கள், கடந்த சில மாதங்கள் அளித்த தெளிவில் எனது வாழ்வை இப்படி தொகுத்துக்கொள்ள விழைகிறேன்.. இங்கே பல முறை பேசியது தான்.. மேலும் பலமுறை அறையின் whiteboard மற்றும் எண்னங்களில் பல்வேரு வடிவில்… Continue Reading →

ழ zhaவானது எப்படி?!

சென்னை வட்ட குழுமத்தில் நண்பர் வெங்கட் ‘ழ‘ விற்கு ‘zha’ என்ற குறியீட்டை யார் அறிமுகபடுத்தினார்கள்? அதை யார் வரையறை செய்தார்கள் என கேட்டிருந்தார். அதற்கு நண்பர் மதுசூதன் சம்பத் (வெண்முரசில் பெயர்கள் செயலியை உருவாக்கியுள்ளார்) ஒரு முதல்கட்ட பதிலளித்திருந்தார். ஆனால், தேடினால் இன்னும் சுவாரஸியமான தகவல்கள் கிடைக்கக்கூடும் எனவும் கூறினார். அதிலிருந்து ஊந்தப்பட்டு கடந்த… Continue Reading →

இந்திய கலையின் பரிணாமம்

2021 புத்தாண்டு அன்று காலை, நண்பர்களுடனான உரையாடலில் ஜெயமோகன் இந்திய கலைகள், குறிப்பாக ஓவியக்கலையின் பரிணாமம் குறித்த ஒரு ஒட்டுமொத்த சித்திரத்தை முன்வைத்தார். முக்கியத்துவம் வாய்ந்த அந்த உரையை, எனது மற்றும் நண்பர் ஜெயராமின் நினைவில் இருந்து மீட்டெடுத்து பதிவிடுகிறேன். இயன்றவரை ஜெவின் கருத்துகளிலிருந்து விலகாமல் இருக்க முயன்றுள்ளேன். ஒட்டுமொத்த சித்திரம் எனும்போது, தகவல்களின் துல்லியம்,… Continue Reading →

சிந்தித்தல்

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் வாசித்தது எதுவும் நினைவில் தங்காது. வாசித்ததை ஒட்டி நீங்கள் சிந்தித்தது மட்டுமே உங்கள் நினைவில் தங்கும் வாசிப்பை நிலைநிறுத்தல்…; ஜெயமோகன் நிறைய வாசித்தல், வாசித்ததை நினைவில் நிறுத்தல் குறித்த ஒரு உரையாடலில், ஜெ வாசித்ததை குறித்து சிந்தித்தலை மீண்டும் வலியுறுத்தினார். தொடர்ந்து “சிந்திப்பது எப்படி?” எனவும் கூறினார். அவர் கூறியதில், என்… Continue Reading →

‎முழுக்கத் தலைகொடுக்காமல் எதையும் இலக்கியத்தில் அறிவியக்கத்தில் ஈட்டமுடியாது. ஒரு குறிப்பிட்ட காலத்திலேனும் வெறிகொண்டு செயல்படாதவனுக்கு அறிவியக்கத்தில் இடமில்லை. ஜெயமோகன்

சாக்லேட்டிற்கும் கவிதைக்கும் என்ன வித்தியாசம்?

கவிதை என்பது ஒரு சமூகத்தின் கூட்டுநனவிலியில் உள்ள படிமங்கள் மொழிக்குறிகள் மூலம் இணைக்கப்பட்டு புதிய படிமங்கள் உருவாக்கப்படும் ஒரு வெளிப்பாட்டு முறை – ஜெயமோகன் கவிதை மட்டுமல்ல, கவிதை பற்றி எழுதியது கூட புரியாத ஒரு ஆரம்ப நிலை வாசகன், தமிழின் முதன்மை கவிஞர்களில் ஒருவரான தேவதேவனை சந்தித்தால்? ஊட்டி குரு நித்யா காவிய முகாமிலிருந்து… Continue Reading →

உளநலன்

மனநலன் மற்றும் அது சார்ந்த பிரச்சனைகள் குறித்த ஒரு சிறு அறிமுகம்.

சகடம் – நாகப்பிரகாஷ்

ஒரு சிறுகதை விவாதம் நாகப்பிரகாஷ் அவர்களின் சகடம் சிறுகதையும், அவரது கடிதமும் மேலுள்ள சுட்டியில். முதல் வாசிப்பு: அமுதனின் பார்வையில் கதை தொடங்குகிறது. அங்கங்கே அவன் பங்கு பெறாத காட்சிகள் கதைச்சொல்லியின் பார்வையில் வருகின்றன. கதையில் இறுதியில் கதைச்சொல்லியின் பார்வையில் ஒரு flashback காட்சி. ஒரு தருணத்தில், ஒரு வாசகத்தில் கதை முடிகிறது. முதல் வாசிப்பில், அந்த… Continue Reading →

மரபை அணுகுதல்

‘மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி?’ என்ற தலைப்பில் ஜெ சென்னையில் நடத்திய கட்டண உரையின் பிறகு அவருக்கு எழுதிய கடிதம்: ஜெ, மரபு குறித்த உங்கள் உரையை இவ்வாறு தொகுத்துக்கொள்ள முயல்கிறேன்: ஒரு செல் உயிரி முதல், அனைத்து உயிர்களிடமும், தான் வாழவேண்டும், பெருக வேண்டுமென்ற உள்ளுணர்வு உள்ளது. அதைத் தாண்டி, தனது சூழலுக்கு ஏற்றவாறு… Continue Reading →

மிஸ்டர் கே – ஆத்மார்த்தி

ஜூலை மாத உயிர்மை இதழில் வெளிவந்த, எழுத்தாளர் ஆத்மார்த்தி அவர்களின் ‘மிஸ்டர் கே’ என்ற கதை குறித்த எனது பார்வை: கதையை வாசித்திருக்காத நண்பர்களுக்காக, கதை குறித்த சிறு அறிமுகம்: கதைச்சொல்லி, தனது நோக்கத்தை கதையின் தொடக்கத்திலேயே கூறி விடுகிறான். “மிஸ்டர். கே என்பவரை அறிமுகம் செய்து கொள்ளுதல்.”. சில மாதங்களாகவே அதற்கு முயன்றுக் கொண்டிருக்கிறான்…. Continue Reading →

லாஓசி, வயது 27.

பூமிக்கு பாரம் சேர்க்க தொடங்கி 27 வருடங்கள். பூமிக்காவது பாரத்தை குறைக்கலாம் என்றால், எடை குறைந்த பாடில்லை. இந்த வருடமாவது ஏதாவது மாற்றம் வருகிறதா பார்ப்போம். கடந்த வருடம், சொந்த வாழ்வில் பெரிய மாற்றங்கள். சில புதிய மனிதர்கள், புரிதல்கள், பழைய மனிதர்கள். வாழ்வின் அந்த பக்கங்களை பற்றி இப்பொழுது எழுதுவதாய் இல்லை. அதை தாண்டி,… Continue Reading →

கேரளத்தில் இலக்கியம்

கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஜெமோவின் பழைய பதிவுகளை வாசித்துக் கொண்டும் , YouTubeல் அவரது உரைகளை கேட்டுக்கொண்டும் இருக்கிறேன். தமிழ் ஊடகங்களுக்கு அவர் தந்த பேட்டிகள் மிகக்குறைவு. ஒரு பேட்டியில், தினமலர் அவரிடம் முன்வைத்த கேள்விகள்: நவீன படைப்பிலக்கியச் சூழலில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் நீங்கள். சினிமாவில் கதை வசனம் எழுதி வருவது பற்றி……. Continue Reading →

ஆனால் பெரும்பகுதியினர் எனக்கிருக்கும் முக்கியத்துவத்தால் பொறாமை கொள்பவர்கள். அதைத் தவிர்க்கவே முடியாது. முப்பதாண்டுகளாக இவர்களின் பொறாமைக்குரிய இடத்திலேயே இருந்துகொண்டிருக்கிறேன். நானாக விலகும்வரை அங்குதான் இருப்பேன். அது என் எழுத்துக்களால் நான் உருவாக்கிக் கொண்டது. அதை எவரும் எனக்கு மறுக்க முடியாது. – ஜெயமோகன்

மரணதண்டனையை முற்றிலும் ஒழிப்போம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் மரணதண்டனையை ஆயுள் கைதாக குறைத்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்த நன்னாளில், அற்புதம்மாள், “என் மகனுக்குத் தூக்கு குறைக்கப்பட்டாலும், மற்ற அப்பாவிகளுக்காக என் போராட்டம் தொடரும்” என கூறி உள்ளார். ஒரு சிறு உந்துதலில் இந்திய அமைப்பில் தூக்கு தண்டனை பற்றி கொஞ்சம் ஆராய தொடங்கினேன்! இந்திய தண்டனைச் சட்டம் 8… Continue Reading →

சா”தீ”

“இப்பல்லாம் சாதி யாரு சார் பாக்றாங்க?” என  பேசி விட்டு… சொந்த சாதியில் வரன் பார்க்கும் சமுகத்தில் இளவரசனின் மரணம் என்ன வகை மாற்றத்தை கொண்டு வரும் என தெரியவில்லை… சாதி இன்னும் அழியாமல் இருப்பதற்கு காரணம் சமூகம் தான்… சாதி விட்டு திருமணம் செய்வது ஏதோ அவமானகரமான செயல் என்பது போல் சொந்தங்கள் பார்ப்பதால்… Continue Reading →

« Older posts

© 2024 பிழைகள் — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑